வருவிக்கவுற்ற வள்ளல்
(இல்லை நூறு பதிகம்)
பொருளும் இல்லைநல் பொழுதும் இல்லை
பசித்தோர்க்கு உணவிட பரந்தமனமும் இல்லை
உருகிஉனைப் பாடிடநின் அருளும் இல்லை
உலகில்
சிறந்துவாழநல் ஒழுக்கமும் இல்லை
குருவென உனைத்தொழநல் குணமும் இல்லை
கடவுள்
ஒருவனெனக் கருதும் கருத்துமில்லை
வருவிக்கவுற்ற வள்ளலுனை வணங்கவு மில்லை
வடலூர்
வாழ்வுவாழநல் விதியும் இல்லையே.
பெருஞ்ஜோதி யன்றிவேறு ஆண்டவன் இல்லை
பாரில்
இதை உணராதவன் மனிதனும் இல்லை
பெருவாழ் வளிக்கும்வேறு கடவுளும் இல்லை
திருஅருட்பா
உரைப்பது பொய்யும் இல்லை
பெருங்கருணை யாலிங்கு துன்பமும் இல்லை
பசித்திருப்பார்
இனிஇப் பாரினில் இல்லை
பெருந் தயவால்இனி இறப்பாரும் இல்லை
பேரிரக்கம்
நீங்கினாலென் உயிரும் இல்லையே.
கற்ற நூலனைத்தும் கிஞ்சித்தும் மெய்யில்லை
கலக்கமுறும்
மதங்களில் பொய்யன்றி வேறில்லை
பற்றுக ளனைத்தும் பதிநிலைக் காட்டுதிவல்லை
பழம்பாடல்கள்
எதுவுமுனை பாடியது இல்லை
சிற்றம் பலம்கண்டிட்டால் குற்றம்பல இல்லை
சூதான
சமயங்களில் சிவமென்பது இல்லை
உற்ற தேகத்தை உயிர்என்றும் மறப்பதில்லை
இனிவள்ளல்
இருக்க வாட்டமென்பதும் இல்லையே.
ஆளுக்கொரு வானமும் ஆளுக்கொரு பூமியுமில்லை
ஆளுக்கொரு
உயிர்போல் ஆண்டவன்தான் இல்லை
நாளும் கிழமையும் நல்லோர்க்கு இல்லை
நாயகன்
அருள் நலிந்தோர்க்கு இல்லை
கோளும் வானும் குடிகெடுப்பது இல்லை
காடும்
மலையும் கருணையாளனுக்கு இல்லை
மாளும் மனிதனுக்கு மாண்பு என்பதில்லை
மாண்டப்
பின்பு மோட்சம் என்பதில்லையே.
கடை விரித்துமதை கடைபிடிப்பேன் இல்லை
கற்றறிந்தார்
சொல்சிறிதும் கேட்பதும் இல்லை
சடை வளர்க்கும் சன்னியாசமும் பிடிக்கவில்லை
சாகாக்கல்வி
சற்றும் அறியவும் இல்லை
விடை பெற்றுச்செல்ல வன்மனமும் இல்லை
விதிவழிச்
செல்லநான் விரும்பவும் இல்லை
எடைபோட்ட இறைவன் எனைஏற்றவும் இல்லை
எப்படி
வாழ்வதென எனக்குத் தெரியவில்லையே.
புருவ மத்திஎதுவென புரியவும் இல்லை
பருவ
வயதிலதை பழகவும் இல்லை
உருவ வழிபாட்டை தொடரவும் இல்லை
உண்மை
தெரிந்தும் உணர்ந்தேன் இல்லை
கருவழி புகாமலதை கடக்கவும் இல்லை
காரிருள்
உலகை வெறுக்கவும் இல்லை
ஒருவழி நிற்கும் உயர்ந்தோன் இல்லை
அருள்தர
அழைத்தும் வருவே னில்லையே.
புண்புலால் உண்டு புழுத்தவன் இல்லை
பொன்
பொருளுக்காக பொய்சொன்னவ னில்லை
பெண்ணோடுக் கூடிச்சுகம் கண்டவன் இல்லை
பொன்னான
மேனிக்கெட மது அருந்தியவனில்லை
கண்மூடி வழக்கத்தைக் கொண்டவன் இல்லை
கதிகலங்க
ஓருயிரை கொலை செய்தவனில்லை
பண்பாடில்லாது பிறர் பொருளை திருடியவனில்லை
புகழுக்காக
குற்றம் புரிந்தவன் இல்லையே.
சாதியிலும் மதங்களிலும் சிறைபட்டவ னில்லை
சாத்திரக்
குப்பைகளை சீண்ட்டியவ னில்லை
வீதியில் மாசுபடஎச்சிலை உமிழ்பவ னில்லை
வீணான
சடங்குகளில் வீழ்பவ னில்லை
நாதியற்ற வடமொழியை நான்நம்பியவ னில்லை
நற்றமிழன்றி
தெய்வ மொழிவே றொன்றில்லை
போதிமரத்தடியில் ஞானம் பெறுவ தில்லை
படைத்தவனும்
பேராசை யன்றி இல்லையே.
இறந்தாரை எரிப்பவன் அன்பானவ னில்லை
இறுதிகாரியம்
செய்பவன் அறிவானவ னில்லை
உறவினத்தார் அக இனத்தாரன்றி யாருமில்லை
இனத்தால்
புறமேவியவர்கள் மனிதர்க னில்லை
பிறவிப் பெரும்பயனை போற்றுவார் இல்லை
பற்றற்றான்
பற்றினை பற்றுவார் இல்லை
உறங்காமல் உறங்கும் உளவறிவார் இல்லை
இரக்கமே
உருவாகி இயங்குவார் இல்லையே.
நாடாததை நாடிநான் நடைபயில்பவ னில்லை
நீடுவாழ்வினை
நாடாதுநான் நலிந்தவ னில்லை
கூடாநட்பில் கூடி கூத்தடிப்பன் இல்லை
காடுமலைத்
தேடி கவிழ்ந்தவன் இல்லை
பாடாதபாடல் பாடி புகழ்ந்தவன் இல்லை
பாழும்நரகை
நானினி பார்ப்பவ னில்லை
மூடாஎன்றினி இறைவனெனை அழைப்பா னில்லை
மாள்வதும்
பிறப்பதும் எனக்கினி இல்லையே.
மூலவரை கண்டுவிட்டேனினி மூப்பு எனக்கில்லை
மேலழிஞ்சிப்
பட்டுவாழ்வு எனக்கினி இல்லை
மூலமல நாற்றம்எனக்கினியும் மீள வருவதில்லை
மேளதாள
பூமாலைகளென் மேனிக் கழகில்லை
காலனின்
கணக்கறிந்தேனிறுதிக் கோல மெனக்கில்லை
காமமும்
கோபமுமென் குடிக்கே வருவதில்லை
பாலருந்தும் பாலனாய்யெனை பிறப்பிப்பார் யாருமில்லை
பாரில்
வேலைமுடிந்தன இனிதுன்ப மேதுமில்லையே.
கடவுளின் நிலைஅறிதல் மதங்களில் இல்லை
கருணையே
கடவுள்மயமாத லென அறிவாரில்லை
மடந்தையரின் மோகம் மேன்மை தருவதில்லை
முத்தேக
சித்திகள் எம்மார்க்கத்திலும் இல்லை
விடமான மதங்களில்சுத்த சன்மார்க்க மென்பதில்லை
வடலூரை
நினைக்க விதிஜெய மாவதில்லை
கடலூரில் வாழுமெனக்கு நீச்சல் தெரியலில்லை
கடவுள்
கருணையால் கடலில் மூழ்கினினேல்லையே.
நோய்யன்றி வாழ்தலைவிட நூதனம் இல்லை
நாயினேனாலும்
உலகரை நம்பினே னில்லை
தாய்யென்னும் தயவைத் தள்ளி நடந்தேனில்லை
தந்தைநின்
னருளால் தூங்கினேன் இல்லை
வாய்மையா லுனைபாடு வதைவிட்டால் நானில்லை
வாய்த்த
என்பெயரால் நீயும்நானும் வேறில்லை
பொய்த்த சமயங்களில் சடங்குகளன்றி சத்தில்லை
பொங்கி
மருதூரார்இதனை பகிர்ந்ததில் தவறில்லையே.
இல்லைநூறை படிப்போர்க்கு வறுமை என்றுமில்லை
இல்லைநூறை
கேட்போர்க்கு மரணம் என்றுமில்லை
இல்லைநூறை அறிவார்க்கு மூப்பு என்றுமில்லை
இல்லைநூறை
நினைப்போர்க்கு துக்கம் என்றுமில்லை
இல்லைநூறை உணர்வோர்க்கு பயம் என்றுமில்லை
இல்லைநூறை
சொல்வோர்க்கு நோய் என்றுமில்லை
இல்லைநூறை பாடுவோர்க்கு எதிரிகள் என்றுமில்லை
இல்லைநூறு
இறைவனின் இரக்கமன்றி வேறில்லையே.














No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.