வெண்ணிலாவே…
ஞானசபைக்
குள்ளிருக்கும் வெண்ணிலாவே – அந்த
ஞானம்வர
வேண்டுகின்றேன் வெண்ணிலாவே.
பச்சைத்திரை
விலகிடவே வெண்ணிலாவே – அங்கே
முச்சுடராய்
ஆனதென்ன வெண்ணிலாவே.
கள்ளமில்லா
உள்ளத்திலே வெண்ணிலாவே – எங்கள்
வள்ளல்
வருவாரோசொல்லாய் வெண்ணிலாவே.
காத்திருந்தேன்
பொழுதெல்லாம் வெண்ணிலாவே – நீயோ
ராத்திரியில்
பூத்தென்ன வெண்ணிலாவே.
கண்நிறைந்த
காதலியே வெண்ணிலாவே – எந்தன்
எண்ணம்
அறிவாயோசொல்லாய் வெண்ணிலாவே.
மூன்றாம்பிறை
அழகினைப்போல் வெண்ணிலாவே – எனக்கு
மூன்றுதேகம்
கொடுப்பதெப்போ வெண்ணிலாவே.
வான்கொடுக்கும்
ஒளியானாய் வெண்ணிலாவே –என்னை
நான்
கொடுக்கபெறுவாயோ வெண்ணிலாவே.
இடங்கலை
மூச்சினிலே வெண்ணிலாவே – உந்தன்
நடமதைக்
காணுகின்றேன் வெண்ணிலாவே.
மேகத்திற்கும்
மேலிருக்கும் வெண்ணிலாவே – எந்தன்
தேகந்தழுவ
வாராய்நீயே வெண்ணிலாவே.
தருமச்சாலை பணிசெய்ய வெண்ணிலாவே – எனது
கருமம் பணிந்தோடக்கண்டேன் வெண்ணிலாவே.
வடலூர் ஞானவெளியிடையே வெண்ணிலாவே – அருட்
கடல் பொங்கக்கண்டேன் வெண்ணிலாவே.
ஜாதிமதம்
ஒழிந்திடவே வெண்ணிலாவே – அருட்
ஜோதிவசம்
ஆக்கிடுவாய் வெண்ணிலாவே.
தேய்பிறை
காலமெல்லாம் வெண்ணிலாவே – நானும்
நேயமுடன் வாடிநின்றேன் வெண்ணிலாவே.
ஆனமட்டும்
அழைத்துவிட்டேன் வெண்ணிலாவே – நீயும்
நாணமுடன்
செல்வதெங்கே வெண்ணிலாவே.
ராமலிங்கம்
பாட்டினிலே வெண்ணிலாவே – நானும்
ராகமிசைக்கின்றேன்
இங்கே வெண்ணிலாவே.
திருவருட்பாப்
புகழ் வெண்ணிலாவே – எந்தன்
திருச்சபை
யாகநின்றாய் வெண்ணிலாவே.
குருவருள்
கூட்டிடவே வெண்ணிலாவே – இங்கே
அருள்நிலைய
மானாதென்ன வெண்ணிலாவே.
ஞானஅலை
கடலினிலே வெண்ணிலாவே – அங்கே
கானஒலி
எழுப்புகின்றாய் வெண்ணிலாவே.
உன்னை
நினைந்துருகுகின்றேன் வெண்ணிலாவே – நீயோ
என்னை
மறந்துசெல்வதெங்கே வெண்ணிலாவே.
கண்ணிரண்டில்
ஒன்றானாய் வெண்ணிலாவே – எங்கள்
கண்மூன்றை
திறப்பாயோ வெண்ணிலாவே.
புருவ
நடுவாயிருக்கும் வெண்ணிலாவே –அங்கே
அருவ
மயமாவதென்ன வெண்ணிலாவே.
சாகாக்கலை
பொழிந்ததென்ன வெண்ணிலாவே – உடல்
போகாம
லிருப்பதென்ன வெண்ணிலாவே.
சித்தி
வளாகந்தனிலே வெண்ணிலாவே – நானும்
அத்து
விதமாகின்றேன் வெண்ணிலாவே.
செத்தவர்
எழுகின்றார் வெண்ணிலாவே – அதை
நித்தமும்
காணுகின்றேன் வெண்ணிலாவே.
உயிரெல்லாம்
இன்பமுற வெண்ணிலாவே – எந்தன்
உயிருக்குள்
ஆடுகின்றாய் வெண்ணிலாவே.
-
திருச்சபை.
-
தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.