கருங்குழி
விண்வெளியில்
தோன்றும் கருங்குழி என்பது பிரம்மாண்டமானது. இப்படத்தில் உள்ள கருங்குழியின் அளவானது
66 கோடி மடங்கு சூரியனைவிட பெரியதாம். கருங்குழியில் நுழைந்தால் அவ்வளவுதான். வெளியே
வரமுடியாது. அது ஒரு வழிப்பாதை. மின்காந்த அலைகள் கூட தப்பமுடியாது. அதனுள் என்ன நடக்கின்றது
என்பதை அறிந்துக்கொள்ளவே முடியாது. அதன் வழியே செல்லும் எதனையும் உடனே தம்முள் ஈர்த்துக்கொள்ளும்
சக்தி உடையதாக உள்ளது. இது விண்வெளியில் இறைவன் நிகழ்த்தும் மகத்துவம்.
வள்ளற்பெருமானோ மிகச்சாதாரணமாக கருங்குழியில்
தங்கி தண்ணீரில் விளக்கேற்றிவிட்டு, அங்குள்ள விநாயகப்பெருமானை பாடிவிட்டு அந்த ஈர்ப்புவிசையை
உடைத்துக்கொண்டு வடலூர் வெளிக்கு வந்துவிட்டார். இவ்வுலகில் இன்னுமொரு கருங்குழி இருக்கின்றது.
இதனைப் பற்றி வள்ளற்பெருமான் பல இடங்களில் பாடியிருப்பார். விண்வெளியில் உள்ள கருங்குழிப்
போன்று ஈர்ப்பு சக்தி இதற்கும் மிகுதியாக உண்டு. எல்லா உயிர்களும் கண்னை மூடிக்கொண்டு
விழுகின்ற பாவக்குழி. இதுவும் ஒருவழிப் பாதைதான். உள்ளே சென்றுவிட்டால் மீளுவது முடியாது.
இது பூமியில் இறைவன் நிகழ்த்தும் மகத்துவம்.
“படியின் மாக்களை
வீழ்த்தும் படுகுழி
பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
கடிமலக் குழி ஆகும் கருக்குழிக்
கள்ள மாதரைக் கண்டு மயங்கினேன்…”
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.