Tuesday, November 27, 2012

ARE YOU VEGTARIAN


நீங்கள் சுத்த சைவமா ?? இன்றிலிருந்து நீங்களும் அசைவம்தான்
என்ன தான் நீங்கள் சுத்த தாவர உணவாளன் என்று பெருமிதம் கொண்டாலும். அனைவராலும் விட முடியாத ஒன்று பால், பால் சார்ந்த உணவுகள். ஜீவகாருண்யம் பேசுபவர்கள் மாட்டின் பாலைத் திருடுவதேனோ என்றக் கேள்விக்கு பதில்லை. 

சமணர்கள் என்பவர்கள் மிகவும் ஆச்சாரமான, கடுமையாக சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். தண்ணீரைக் கூட வடிக்கட்டி குடிப்பவர்கள், தப்பி தவறியும் பூச்சிகளை விழுங்கிவிடக் கூடாது என்பதால்.

அவர்களிடம் இருந்து தான் பௌத்தம், இந்து மதம் தாவர உணவுப் பழக்கத்தைக் காப்பியடித்தன அது தனிக் கதை. ஆனால் சமணர்களால் கூட பால் உண்பதை விட முடியவில்லை. சமண துறவிகள் கூட பால், பால் சார்ந்த உணவை உண்கின்றார்கள். பால் என்பது விலங்கின் ரத்தம் என்பதை நாம் அறிவோம். அது குட்டிகளுக்கு கொடுக்கவே தயார் செய்கின்ற பாலை நாம் பறித்து பருகுகின்றோம் அல்லவா. 

மனிதனுக்கு புரதம் மிக மிக அவசியம். புரதம் என்பது விலங்குகள் ஊடாகவே நமக்கு அதிகம் கிடைக்கின்றது. மாமிசம் உண்ணா விட்டாலும், விலங்குகள் தரக்கூடிய பாலை பருகித் தான் ஆக வேண்டும் என்ற நிலை மனிதனுக்கு உள்ளது. 

அடுத்த முறை எவராவது தாம் சுத்த சைவம் என உதாறினால், நீங்கள் பால் குடிப்பீர்களா என கேளுங்கள் . ஆம் ! என்றால் அவர் சுத்த சைவம் இல்லை, சுத்த பேத்தல் என்று கூறி அனுப்பிவிடலாம்.



தி.ம.இராமலிங்கம். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.