பாலியல் வன்கொடுமை
மனிதன் என்பவன் உண்மையில்
மிருக வம்சமா?
சத்தியமாகச் சொல்
நீ மனிதன் தானா? என்ற பழைய சினிமா பாடல் வரியினுக்கு ஒவ்வொரு ஆடவரும் தனது மனசாட்சியினை
ஆதாரமாக வைத்து சிந்தித்தாலே, உடனே தெரிந்து விடும் நீ மனிதனா? மிருகமா? என்று, ஆனால்
அது அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக உள்ளது தான் இப்போது பிரச்சனை. நம்முடன் பழகுபவர்களில்
யார் மிருகம்? எப்போது மிருக குணம் வெளிப்படும்? என்று யாருக்கும் தெரியாது. பிரமச்சரியம்
பற்றி உபதேசம் செய்பவர்களையே இந்த பெண் இன்பம் என்ற மாயை, பாலியல் வன்கொடுமை என்ற மிருகசெயலுக்கு
மாற்றி விடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
கண்போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன
போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
இப்படி மனிதர்கள் போன பாதையை மறந்ததினால் வந்த வினைகள் தான் இப்படிப்பட்ட
பாலியல் வன்கொடுமைகள் நடக்க காரணம்.
சரி, இவற்றை தடுக்க என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்று பல்வேறுபட்ட
ஊடகங்கள் வழியே பலர் கூறிய வழிமுறைகளை இங்கே தொகுப்பாக பார்ப்போம்.
அனைத்துப் பெண்களும்
மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள்:
# வெளியில் செல்லும் பொழுது தற்காப்பிற்காக மிளகாய் பொடி, கண் எரிச்சல் தெளிப்பான்களை
எடுத்துச் செல்லலாம்.
# தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ளலாம்.
# விரலமில்லாத ஆடைகளை அணியலாம், உடல் முழுக்க ஆடைகளால் மறைக்கலாம்.
# ஆண் நண்பர்களை முற்றும் தவிர்க்கலாம்.
# சிறிய வயதிலேயே திருமணம் செய்திடலாம்.
# கைப்பேசி உபயோகத்தை தவிர்க்கலாம்.
# இரவில் பயணம் செய்வதை தவிர்க்கலாம்.
# உறுப்பை மறைத்து பூட்டு போட்டுக் கொள்ளலாம்.
# விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் கவர்ச்சியான காட்சிகளை தவிர்க்கலாம்.
இவைப் போன்று கருத்துகளை இன்னும் விரிக்கின் பெருகும் என்க…
அனைத்து ஆண்களும்
பாலியல் வன்கொடுமையை செய்யாமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய ஒழுக்கம் சார்ந்த, மனிதாபிமானம்
சார்ந்த, பல்வேறுமதங்களில் உள்ள நெறிமுறைகளை இதுவரை யாரும் ஊடகங்களில் கூறியதாக எனக்குத்
தெரியவில்லை.
ஆனால் பாலியல் வன்கொடுமை செய்துவிட்ட பின்பு அந்த ஆடவனை எப்படி தண்டிக்கலாம்?,
அந்த தண்டனையின் மூலம் மற்ற ஆண்களுக்கு ஒருவித பயத்தை உருவாக்கி இந்த வன்கொடுமையை இனி
தடுக்கலாம் என்கிற ரீதியில் பல கருத்துகளை பல்வேறுபட்ட ஊடகங்கள் வழியே பலர் கூறிய வழிமுறைகளை
இங்கே தொகுப்பாக பார்ப்போம்,
# மரண தண்டனை அளிக்கலாம்.
# பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளலாம்.
# உறுப்புகளை வெட்டிவிடலாம்,
# ஆண்மை தன்மையை நீக்கிவிடலாம்,
# ஆயுள் இருக்கும் வரை சிறை தண்டனை அளிக்கலாம்,
# விபச்சாரத் தொழிலையும் அரசே ஏற்று நடத்தலாம்.
# கைகளில் அழியா வண்ணம், மற்றவர்களுக்கு தெரியும் வண்ணம் பச்சை குத்தலாம்.
இவ்வாறு பெண்கள் மேற்கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளையும், தவறு செய்த ஆண்களுக்கு
கொடுக்கக்கூடிய தண்டனைகளையும் பலர் மேற்கொண்டவாறு பகிர்ந்துக்கொண்டதை பார்த்தோம்.
இப்படி என்னதான் பெண்கள் தடுப்புமுறைகளை கையாண்டாலும், தவரிழைத்த ஆண்களுக்கு
தண்டனைகள் கொடுத்தாலும் இந்த பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க முடியுமா? ஆக
இதற்குத் தீர்வுதான் என்ன???
அமெரிக்காவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து மத சார்பாக கலந்துக்கொண்டவர்
தமது கருத்துகளை தெரிவிக்கும் முன்பு “சகோதர
சகோதரிகளே” என்று அணைவரையும்
அழைத்து நமது நாட்டின் சகோதர பாசத்தை வெளிப்படுத்திய “விவேகானந்தர்”
நமது இந்திய திருநாட்டில் தானே பிறந்தார்! அந்த சகோதர
சகோதரி பாசம் – நட்பு – உறவு – இப்போது வேகமாக மறைந்து வருவதையே இப்படிப்பட்ட கொடுமைகள்
நடக்க முக்கிய காரணமாக உள்ளது. சமுதாயத்தில் நாம் அணைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்பதனை
நமது குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம்
உணர வைக்கவேண்டும்.
அறனொன்றோ ஆன்றவொழுக்கு”
என்று திருக்குறளை
நமக்காக கூறிய “திருவள்ளுவர்” நமது இந்திய திருநாட்டில் தானே பிறந்தார்!
இக்குறளின் படி “பேராண்மை” – பிறன்மனை
நோக்காத பேராண்மை இன்று எத்தனை பேரிடம் உள்ளது. இதனை ஒவ்வொரு இந்திய குடும்பங்களில்
உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது நடத்தைகளின் மூலம் உணர வைக்கவேண்டும்.
மனிதன் செய்யும் இப்படிப்பட்ட
பாவங்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனைகளாக வள்ளலார் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்,
# மனத்தால் செய்யும் பாவங்களுக்கு
சண்டாளாதி சரீரம் உண்டாகும்.
# வாக்கால் செய்த பாவங்களுக்கு
மிருகம் முதலான சரீரம் உண்டாகும்.
# தேகத்தால் செய்யும் பாவங்கட்கு
மரம் முதலான சரீரம் உண்டாகும்.
இதில் நமக்கு எந்த தேகமோ? இது
வெறும் பொய்யுரை என எண்ணிவிடாதீர்கள், உண்மையானது. “நான் உரைக்கும் வார்த்தையெல்லாம்
நாயகன் தன் வார்த்தை”
என்று வள்ளலார் கூறுவதால் இது வள்ளலாரின்
வார்த்தை அல்ல! இறைவனின் வார்த்தையே என்றுனர்தல் வேண்டும்.

இத்திரு தந்தை நாட்டில், இவ்வாறு பல்வேறு மகான்கள் தோன்றி, பல்வேறு உபதேசங்களை
செய்து அருளியது மட்டுமல்லாது அதனை தங்களது வாழ்க்கையிலும் கடைபிடித்துக் காட்டினார்கள்.
அதன்படி இனிமேலாவது இவ்வுலகில் பெண்களை மதிக்க பழகிக்கொள்வோம்.
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்கமுடியாது” என்பதற்கிணங்க, சட்டங்கள்,
அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் இவைகள் எதுவும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவோ குறைக்கவோ
இயலாது. ஆடவரின் மனங்கள் / பார்வைகள் இயற்கையாகவே மாறவேண்டும். மன மாற்றத்திற்கான வழிமுறைகளை
இந்த ஆடவ சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வோம்.
மேற்கண்ட தண்டனைகளை கொடுப்பதை விட, அவர்களை உயிருடன் மருத்துவ துறைக்கு கொடுத்துவிடவேண்டும்.
அங்கே பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் தங்களது உயிரையும், உடலையும் மனித குலத்திற்கு
அற்பனிக்கிறார்கள், அவர்களுக்கு இது தண்டனை அல்ல, மனிதர்களுக்கு செய்யும் சேவை.
அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.