Monday, November 11, 2013

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவர் உண்மையல்ல!...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவர் உண்மையல்ல!...
 
ஒரு சீடன் தனது குருவிடம் - ஐயா, நீங்கள் எப்படி தங்களையே கடவுள் என்று கூறிக்கொள்கிறீர்? அது தவறில்லையா?     
 
 உடனே ஞானி - அது இருக்கட்டும், நீ தற்போது உன் வீட்டில் இந்து மதக்கடவுள் புகைப்படங்களை எல்லாம் எடுத்துவிட்டு வெறும் ஜோதியினை மட்டும் வைத்து வழிபடுகிறாய் என்று கேள்விபட்டேன். அப்படியா!

அதற்கு சீடன் - ஆம் ஐயா, வள்ளலார் வழியில் முற்றாக வந்துவிட்டேன். அதனால் இனி ஜோதிதான் எம்முடைய இறைவன் என்றார்.

 உடனே ஞானி - ஒருவேளை அந்த ஜோதி உன் முன் வந்து, காலம் காலமாக வணங்கிவந்த கடவுளையே நீ நம்பாமல் வழிபடுவதை விட்டுவிட்டீர்! புதியதாக வந்த நான் எத்தனை காலம் உங்களிடம் வழிபாட்டில் இருப்பேனோ? என்று கேட்டால் என்ன செய்வீர்? என்றார்.

அதற்கு அந்த சீடன் - அருட்பெருஞ்ஜோதி கடவுளும், பொய் கடவுள், என்று என்அறிவு உணர்த்தினால் அதனையும் விட்டுவிட தயங்கமாட்டேன், என்றார்.

 உடனே ஞானி - உனது விருப்பு வெறுப்பற்றத் தன்மையினை பாராட்டுகிறோம். ஒருவேளை அருட்பெருஞ்ஜோதி கடவுளும் பொய் என்று உன் அறிவு உணர்த்தினால், அதன்பிறகு எந்தக் கடவுளை வணங்குவாய்? என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன் - கடவுள் உண்டு என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் அக்கடவுள் யார்? எங்கிருக்கிறார்? என்பதனை என்னுள்ளே சென்று கண்டுபிடித்துவிடும் சக்தி என்னிடம் உள்ளது. அதன்பிறகு நானே கண்டுபிடித்த அக்கடவுளை வணங்குவேன். உலகுக்கும் அறிவிப்பேன், என்றார்.

 உடனே ஞானி - நீ வேறு ஒரு கடவுளை புதியதாக கண்டுபிடிக்கும்வரை எந்தக்கடவுளை வணங்குவாய்? என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன் - அதுவரை என்னையே நான் வணங்கி வருவேன், என்றார்.

 உடனே ஞானி - என் அருமை மாணவரே! இதைத்தான் நான் தற்போது செய்துவருகிறேன். எனது கடவுள் வெளியில் எங்கும் இல்லை, யாருடைய உபதேச மொழியிலும் இல்லை, யாருடைய வேதநூலிலும் இல்லை, என் கடவுள் பத்திரமாக என்னுள்ளே இருப்பதை நான் கண்டுகொண்டேன், அதனால் நானே கடவுளாக இருக்கின்றேன், நான் - என்னைத்தவிர வேறுயாரையும் வணங்கவேண்டிய அவசியம் இல்லை. வள்ளலார், தனக்கு முன்னே கண்ணாடியை வைத்து வழிபட்டதும் இதற்காகத்தான். தனது பிம்பத்தை தானே வழிபட்டார். அவர் தாமே கடவுளாகவும் பரிணமித்தார்.
 
 

எனவே வள்ளலார் கூறினார் என்று அவர் வழியினை பின்பற்றுவதை விட, முதலின் உன்னில் உன்னைப்பார், பிறகு நீயும் வள்ளலார் ஆவதைக் காண்பாய்.

 என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே

என்னுளே நிறைந்த என்தனி அன்பே

 அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.