Tuesday, November 19, 2013

மஹாமந்திர பந்தம்

மஹாமந்திர பந்தம்

பேரன்புடையீர்! வணக்கம்!

கவி எழுதுவதில் 'சித்திரக்கவி' என்ற வகையில் நாம் ஏற்கனவே 'மாலைமாற்றுப் பதிகம்' பற்றி கண்டோம். ( http://www.vallalarr.blogspot.in/2013/11/blog-post_7.html ) இப்போது அதே சித்திரக்கவியில் வேறு சில முறைகளைப்பற்றிக் காண்போம்.

சித்திரக்கவிகளை இயற்றுவது மிகக் கடினமான செயல். புலவர்கள் அந்த முயற்சியை அரிதாகவே செய்வர். சித்திரக்கவியில் கமலபந்தம், லிங்கபந்தம், இரதபந்தம் என்ற ஒருவகைப் பாடல்கள் உண்டு. வெண்பா இயற்றி, அதிலுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, கமலமாகவோ (தாமரை), லிங்கமாகவோ, ரதமாகவோ (உருவம்) கட்டங்களை நிறைத்து அமைக்கப்படுவது சித்திரக்கவிகளாகும்.

திருஞானசம்பந்தர் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ஓவியக் கவிதைகள் ஒன்றிலிருந்து தொடங்கி ஏழு வரை முடிந்து, மீண்டும் ஏழிலிருந்து தொடங்கி ஒன்றில் முடியும் விசித்திரமான தேர் வடிவில் அமைக்கப்பட்ட ஓவியக் கவிதைகளாகும்.

திருமங்கையாழ்வார் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அமைந்துள்ளது.

சுவாமிமலையில் முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருவெழுக்கூற்றிருக்கையை இக் கோயிலில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் பார்த்து வருகின்றனர்.

நான்கும் நான்குமாக எட்டு பாம்புகள் பிணைந்தது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட அஷ்ட நாக பந்தம், அழகிய தமிழ் ஓவியக் கவிதையாகும்.

முரசு போன்ற அமைப்பில் உள்ள முரச பந்தம்,

மயில் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட மயூர பந்தம்,

மாலை மாற்றிக்கொள்வதைப் போல எழுதப்பட்ட மாலை மாற்று போன்ற ஓவியக் கவிதை மரபு தமிழரின் கவிதைக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

தமிழின் எண்ணற்ற கவிதை மரபில் ஓவியக் கவிதை மரபை இன்றும் குழந்தைகள்கூட கண்டு ரசிப்பதுடன், இதுபோன்ற ஓவியக் கவிதைகளை அவர்களும் எழுதி விடவும் முடியும்.

கவிதைக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்ரா பெüண்ட் ஆங்கிலத்திலும், இந்தியாவில் தாகூர் வங்க மொழியிலும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர்.

சிறிய ஓடை ஓடுவது போன்ற வடிவில் ரஷிய மொழியில் மாயகாவ்ஸ்கியும், பிரெஞ்சு மொழியில் ஃபார்க், சீன மொழியில் லூசூன், போன்றோர் சித்திரக் கவி எனப்படும் ஓவியக் கவிதைகளை எழுதி கவிதை உலகுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

யாம் இப்போது 'திரு அருட்பிரகாச வள்ளலாரை' பாடுபொருளாகக் கொண்டு ஒரு கலிவிருத்த பாடலை ஆக்கியுள்ளோம். இது சித்திரக்கவி அமைப்பில் எழுதியதாகும். "குத்துவிளக்குப் பந்தம்" என்று இதற்குப் பெயர். வரையப்பட்டுள்ள குத்துவிளக்கின் அடியிலிருந்து வலம் இருந்து இடமாகவும் பிறகு இடமிருந்து வலமாகவும் முறையாக மாறி மாறி மேல்நோக்கி ஒவ்வொரு எழுத்துகளையும் பொருத்த வேண்டும். இறுதியில் அக்குத்துவிளக்கின் மையத்தில் மேலிருந்து கீழாக படித்தால் "மஹாமந்திரம்" காட்சிகொடுப்பதே இதன் சிறப்பு.



மஹாமந்திர பந்தம்
 
(கலிவிருத்தம்)

உன் ஆணைஎங்கும் ஓரருவாய் தனித்தேக

என் பேரகங்காரம் அருளோங்கி பெருகப்

பன் னிஅழிததாகிதிட ரஜோகுணம்விஞ்சி ஜீவனில்சேரும்

இன் பநாளை பெறவேஎனாட்கொ ளருளே அன்பே.


 
குத்துவிளக்குப் பந்தம்

 
 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.