Saturday, July 12, 2014

என்னுள் படித்தது



என்னுள் படித்தது                       10.07.2014



ாலை நேரம்
மதி மயங்கி மாயும் நேரம்
மாயா சக்திகள் கூடும் நேரம்
மனதிலே திருவிளங்க
சிவயோக சித்தி விளங்க
தவநிலையில் நான்;
தனது தொலைந்துப்போன
நாளை எண்ணி பூமியே
கவலைக் கொள்ளவில்லை
தனது மரணத்தை நோக்கி
ஓயாமல் சுற்றுகிறது;
இதில் எனது நாட்கள்
எம்மாத்திரம்?

இனிவரும் நாட்களை
எண்ணி பூமி
கவலை உறுகிறதா?
அல்லது மகிழ்கிறதா?
நானறியேன் - ஆனால்
அல்லா என்று தினம்
ஐந்து முறை ஓதியே
தவநிலையில் நான்;
ஏதுமறியாத பூமியில்
எல்லாம் அறிந்த
இயற்கை விளையாடுகிறது;
என்னைச் சுமந்துக்கொண்டு
எங்கோ செல்கிறது!

விண்வெளி பயணம்
இரவும் பகலும்
நிலவும் கதிரும்
உதித்து மறையும்,
சிலுவையில் அறைந்த
இயேசுவை நினைத்து
தவநிலையில் நான்;

காட்சிகள் பலவாய்
காண்பன பலவாய்
உயிர்களின் ஆட்டம்;
பிறப்பன பலவாய்
இறப்பன பலவாய்

மாயையின் அரங்கேற்றம்
என்னை திகைக்கவைக்கிறது;
நான் பிறந்ததை அறியேன்
இறந்ததையும் அறியேன்
ஆனால் இடையில்
உண்மையை அறிய முயன்றேன்;
முடியவில்லை, மதங்கள்
என்னை தத்தெடுத்துக்கொண்டன
முன்னவன் சொன்னதெல்லாம்
உண்மையெனக் கொள்வது
ஆண்மையில் இழுக்கெனக்
கொண்டு நானும்
தேடுகிறேன் உண்மைதனை;

பரவெளியில் அடிமுடியை
பார்த்தறியேன், அதிலொரு
அணுவாய் இப்பூமி
சுற்றுவதை அறிவேன்;
பூமியே அணுவானால்
நான் அதில் பலகோடியுள்
ஒரு துகளாவேனோ?
நான் என்கிற துகளையும்
இறைவன் ஆளுகிறான்
என்றால் அவன் அறிவுடையவனா?
அல்லது நான் அறிவுடையவனா?
தெரியவில்லை! தெரியும்வரை
தவநிலையில் நான்;

பூமியின் விண்வெளிப்
பயணம் விபத்தில்லாமல்
செல்கிறது, திடீரென
சூரியனின் அருகில்
நெருங்குகிறது எனதுவாகனம்,
எனக்குத் தெரிந்து
பூமியின் இறுதிச்சுற்று


அதுதான், எல்லாம்
நொடிப்பொழுதில் காணவில்லை,
இறுதிவரை உண்மை
தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை
இப்போது எனது தவநிலைக்
கலைந்துவிட்டது, ஆனால்

தற்போது நான் இருக்கிறேனா
இல்லையா எனத்
தெரியவில்லை, மீண்டும்
பூமி தோன்றுமா?
அதில் நான் வருவேனா?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.