Tuesday, July 15, 2014

மலரே வந்துவிடு



                     மலரே வந்துவிடு                  15.07.2014

                          

மலர்ந்த மொட்டொன்று
மந்திரம் சொன்னது.
மூடிய இதழ்களே
தந்திரம் என்றது.
காற்றோடு ஆடியே
வாசனை தந்தது.

என்னோடு இருக்கவே
தோட்டத்தில் பூத்தது.
சுவையான அமுதமாம்
தேனினைக் கொண்டது.
பூவின்பெயர் என்னென
மண்ணினைப் பார்த்தது.

என்னைப் பாராமல்
வெட்கித்து நின்றது.
நெஞ்செல்லாம் நீயென
கீதம் இசைத்தது.
ஒருநாள் எனக்கு
தேனினை ஈந்தது.

எப்போதும் என்னோடு
இருக்கவே கேட்டது.
இரவொடு பகலெலாம்
மலரோடு சென்றது.
எனக்கொரு உறவாம்
சூலும் உற்றது.

கொலையோடு புலையும்
இன்றோடு மறந்தது.
எல்லா உயிரும்
இன்புற்று வாழ்ந்தது.
எனக்கென மலர்ந்தது
இதழ்விரித்து மகிழ்ந்தது.

சன்மார்க்க உலகம்
இனிதே கனிந்தது.
பன்மார்க்க மெல்லாம்
பாழ்பட்டு போனது.
அருட்ஜோதி மலராம்
அமுதத்தை சொறிந்தது.

கண்மூடி பழக்கம்
கனத்தே மாய்ந்தது.
சுத்த சன்மார்க்கம்
சகத்தில் வென்றது.
மலர்ந்ததில் முப்பூ
கைவரப் பெற்றது.

செத்தவ ரெல்லாம்
சிரிக்கக் காண்பது.
இத்தவப் பலனை
எனக்கே கொடுத்தது.
என்னுள் மலர்ந்த
மலரை என்னென்பது.

இயற்கை உண்மை
என்னுள் கலந்தது.
சன்மார்க்க சித்தியை
நான்பெற்றுக் கொண்டது.
இன்பத்தை எழுதவே
பாட்டும் எழுந்தது.

மரணம் மலரிடம்
மண்டியிட்டு ஓடுது.
மலரோடு என்னையும்
தெய்மெலாம் தேடுது.
எனைப்பொல் பலர்இனி
மலரோடு கூடுது.

மலர்பூக்க தோட்டத்தில்
திருவருட்பா பாடுது.
வண்டெல்லாம் தேன்பருக
மலரோடு ஆடுது.
சமய மதங்களெல்லாம்
உலர்ந்தமலரென்று சாடுது.

வாழி என்தோட்டத்தில்
மலர்ந்த மலரென்பது.
வாழி மந்திரம்சொன்ன
மலர்ந்த இதழென்பது.
வாழி ஐம்புலன்ஒடுக்கிய
தந்திர மொட்டென்பது.

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.