Tuesday, December 6, 2016

- ஜீவபந்து ப.ந.ஸ்ரீபால்

- ஜீவபந்து ப.ந.ஸ்ரீபால்

1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் என்ற கோயிலில் நடைபெற்றஎருமைக்கடா பலியை நிறுத்த பிரச்சாரம் செய்து வந்தேன்.

என்னுடைய பிரசாரத்திற்குத் திருநெல்வேலி சபை சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரும் பல அறிஞர்களும் எனக்குத் துணையாக நின்றனர். இந்தப் பலிவிலக்குப் பிரசாரத்தை எதிர்ப்பவர்களும் இருந்தனர். எங்களுக்கு எதிராகப் பிரசாரமும் செய்தனர்.

இவ்வெதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி தெய்வங்களின் பெயரால் பலியிடும் கொள்கையைப் பற்றியும் இங்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பைப் பற்றியும் மகாத்மா காந்தியடிகளுக்கும் ஜவஹர்லால் நேருஜி அவர்களுக்கும் தந்தி மூலம் அவர்கள் அபிப்பிராயங்களைக் கேட்டேன். அவ்விரு மகான்களும் தந்தி வாயிலாக அறிவு சான்ற அறிவுரைகளை அனுப்பினர்.

Sacrifice of animals in the name of religion and God is remnant of barbarism. - M.K. Gandhi
மதத்தின் பெயராலும் தெய்வத்தின் பெயராலும் பிராணிகளைப் பலியிடுதல் காட்டுமிராண்டித் தனத்தின் கையிருப்பு - காந்தி.

(கையிருப்பு என்றால் நம்மிடமுள்ள அநாகரிகப் பழக்க வழக்கங்களில் ஒழிந்தன போக மீந்திருப்பது)

I am grieved to learn that it is proposed to offer animal sacrifice in temples. I think that such sacrifices are barbarous and they degrade the name of religion. I trust that the authorities of the temple will pay heed to the sentiments of cultured people in this matter and refrain from such sacrifices. -Jawaharlal Nehru

கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கேட்க மிகவும் வருந்துகிறேன். அவ்வாறு பலியிடுதல் மிலேச்சத்தனமென்றும் மதத்திற்கு இழுக்காகுமென்றும் நான் கருதுகிறேன். இவ்விசயத்தில் கோயில் அதிகாரிகள் கற்றவர்களுடைய மனப்பான்மையைக் கவனித்து அவ்வாறு பலியிடுவதை விலக்குவார்களென்று நான் நம்புகிறேன். - நேரு

இவ்வறிவுரைகளை அச்சிட்டு நகரெங்கும் பரப்பினேன். அவ்வறிவுரைகளை அக்கோயில் தர்மகர்த்தர்களும் அறிஞர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியோடு படித்து உயிர்ப்பலியை அறவே நிறுத்தி விட்டார்கள்.

- ஜைன நெறிகளும் வள்ளலார் புரட்சியும் என்ற நூலிலிருந்து.


2 comments:

  1. Yella animals kum unavu kidaikka step edunga

    ReplyDelete
    Replies
    1. இறைவன் அருளால் அனைத்து விலங்குகளுக்கும் ஆகாரம் கிடைக்கும். மனித முயற்சியால் ஜீவகாருண்யமும் நடக்கும்.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.