Tuesday, September 5, 2017

179-ஆம் ஆண்டு பிறந்த நாள்



179-ஆம் ஆண்டு பிறந்த நாள்


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை காரணத்தால் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், கடலூர் வட்டத்தில் உள்ள "காரணப்பட்டு" கிராமத்தில் ச.மு.. அவர்கள் வந்தருளினார்கள். தமது ஊழ்வினைத் தந்த வரத்தினால் திருவருட்பிரகாச வள்ளலாரை நேர்காணும் வரமும், அவரையே தமது சற்குருவாக ஏற்கும் திறமும் இவருக்கு இறையருளால் வழங்கப்பெற்றபோது அவருக்கு அகவை இருபத்தொன்று. தொன்றுத்தொட்டு வருகின்ற இறைமொழியாம் திருநெறிய தமிழை, அலைகடல் எழுப்பும் சத்தத்தைப்போன்று திருவருள் தமிழின் சந்தங்கள் அவரது பாடலில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருப்பதைக் கேட்கமுடிகிறது. முதன் முதலில் தம்முடைய இருபத்தோறாம் அகவையில் முருகப்பெருமானின் அருளினால் "சாமிமலை சாமிநாதக் கடவுள் தோத்திரம்" பாடியருளினார். அதன்பிறகு தமது சற்குருநாதரின் ஆணைப்படி பிரபந்தங்கள் பலப்பாடி தமிழுலகில் ஒரு தலைசிறந்தப் புலவர் என்றும் தமிழுலகிலும் சன்மார்க்க உலகிலும் ஒருபுதிய நிலையான "சமரச பஜனை" என்ற அமைப்பினையும் ஏற்படுத்தினார். திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றுக் குறிப்புகளை மிகச்சுருக்கமாக எழுதினார். இவர் எழுதிய இந்தக் குறிப்புகள்தாம் பின்னர் வள்ளலாரின் வரலாறு எழுதுவதற்கு இன்றியமையாத் துணையாயிற்று.

.மு.. உரைநடை நூலாசிரியராகவும், கவி புணைவதில் கவிஞராகவும், இராகம் அமைத்து இசைப்பாக்கள் இயற்றி பாடியருளியதால் இசைஞானியாகவும், பாடலாசியராகவும், திருஅருட்பா பாடல்களை சீர்பிரிக்கும் திறமைவாய்ந்த தமிழ் புலவராகவும், ‘நடந்தவண்ணம் உரைத்தல்மற்றும் திருஅருட்பாவினை பதிப்பித்த பதிப்பாசிரியராகவும், அடிகளாரின் நிகழ்வுகளை சரித்திரமாக தொகுத்தமையால் இவர் ஒரு வரலாற்று ஆசிரியராகவும், நூலாசிரியராகவும்,   தொகுப்பாசிரியராகவும், சிறந்த சன்மார்க்க சொற்பொழிவாளராகவும் பல்முக பார்வையுடன் விளங்குவதை நாம் தெள்ளத்தெளிவாக காணமுடிகிறது.

தமது சற்குருவான திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட நான்கு திருமுறைகள் அடங்கிய "திருஅருட்பா" நூலினைக் கண்ணும் கருத்துமாக வைத்து போற்றிவந்தார். இவருடைய நிழற்படத்தில் வலது கரங்களில் வைத்திருக்கும் புத்தகமே அத்திருப்புத்தகமாகும். மேலும் தமது சற்குருவான திருவருட்பிரகாச வள்ளலாரிடம் தாமே கேட்டுப்பெற்றது, அவரது ஞானதேகத்தைத் தாங்கிய பாதுகைகள் ஆகும். அந்த இருபாதுகைகளும் தற்போது "காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையத்தில்" பாதுகாக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் வருகின்றது.

ச.மு.க. ஐயா அவர்களின் பிறந்த நாள் வருகின்ற செப்டம்பர் 07-ஆம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்பட இருக்கின்றது. நன்றி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.