Wednesday, January 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டு 2014

அன்பர்களே! இன்று (01.01.2014) காலை
ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சியினை முன்னிட்டு வடலூர் தருமச்சாலையிலிருந்து மேட்டுக்குப்பம் சித்திவளாகம் வரை நடைபயணம் நடைபெற்றது. இதில் பல சன்மார்க்கிகள் கலந்துக்கொண்டு திருஅருட்பிரகாசருக்கு புத்தாண்டு வாழ்த்தினை பகிர்ந்துக்கொண்டனர்.

அவ்வமயம் 'காரணப்பட்டு ச.மு.கந்தசாமி' ஐயாவின் அறக்கட்டளை சார்பில் வெளிவந்த "நமது மார்க்கம்" என்ற நூலினை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

அப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை இங்கு உங் களுக்காக பகிர்ந்துக்கொள்கிறேன். இன்றைய புத்தாண்டு தினத்தில் வடலூர் ஞான சபையில் ஏற்றப்பட்டிருந்த சன்மார்க்க கொடியானது மிகவும் கிழிந்த நிலையில் பறந்துக்கொண்டிருந்ததை பார்த்து வருத்தப்பட நேர்ந்தது. பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஞான சபைக்கு சென்னை மற்றும் பிற பகுதியிலிருந்து சன்மார்க்கர்கள் வந்து செல்வது வழக்கம். அப்படிப்பட்ட நாளில் இக்கொடியினை வள்ளலார் தெய்வநிலையம் கவனியாது இருந்தது வருந்தத் தக்கது என்பதனைவிட கண்டிக்கத்தக்கது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தெய்வநிலைய அதிகாரிகளை இது சம்பந்தமாக விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு நாட்டின் தேசியக் கொடி எப்படி புனிதமானதோ அவ்வாறே சன்மார்க்கர்களுக்கு வள்ளலாரின் ஆன்மக் கொடி மிகவும் புனிதமானது. எனவே கொடிக்கு உரிய மரியாதையினை கொடுப்பது நமது கடமை.

இன்றைய கொடியின் நிலையினையும் இங்கே உங்களுக்காக பகிர்கிறேன். நன்றி.









 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.