Tuesday, June 9, 2020

கல்லூரி நண்பர்கள்


கல்லூரி நண்பர்கள்
++++++++++++++


நண்பர்களாம் நண்பர்களாம்
கல்லூரி நண்பர்களாம்!

கடற்கரை காற்றினிலே
கருக்கொண்ட நண்பர்களாம்!

கடலலை கரையெங்கும்
கால்பதித்த நண்பர்களாம்!

காலம்பல சென்றிடினும்
காதல்செய்யும் நண்பர்களாம்!

கொரோனா காலத்திலே
கூடிநிற்கும் நண்பர்களாம்!

காடுமலை சென்றிடினும்
கைகொடுக்கும் நண்பர்களாம்!

வாழையடி வாழையென
வந்துதித்த நண்பர்களாம்!

வானுறங்கும் நேரத்திலும்
வான்நிலவாம் நண்பர்களாம்!

வானமே எல்லையென
வானுயர்ந்த நண்பர்களாம்!

ஒருவருக்கு ஒருவரென்று
உறவான நண்பர்களாம்!

உயிருடல் உள்ளதுபோல்
உட்கலந்த நண்பர்களாம்!

நல்சமுதாய சிந்தனையை
நன்கறிந்த நண்பர்களாம்!

அன்பெனும் உலகத்திலே
பண்பான நண்பர்களாம்!

இரக்கமே வடிவான
இறைவனின் நண்பர்களாம்!

ஓருயிர் துன்பமென்றால்
ஓடிவரும் நண்பர்களாம்!

பழிபாவம் என்றுவந்தால்
புறமேவும் நண்பர்களாம்!

உலகியல் மக்களெல்லாம்
போற்றுகின்ற நண்பர்களாம்!

நண்பர்களாம் நண்பர்களாம்
கல்லூரி நண்பர்களாம்!

--தி.ம.இராமலிங்கம்.









No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.