Monday, August 16, 2021

அமரன் -

 

                                     அமரன் 


உலகம்  இதுவென காரண மாயையை

விலகும் வகைசெய காரிய பாடலை

இதயம் நிறைவுற பாடிய போதக  - வடலூரா

 

உதயக்  கலைதனை ஈரற பூரண

இடநல் நடுவினை கூடுற கூவிய

நடுவில் பரவிய ஜோதியை மேவியநடமாட

 

நிதமும் உயிரினை தீதற நாடிய

விதமும் பசியற ஓடிய வாடிய

முகமும் கலையற சாடிய மேதகுதயவானை

 

சடலம் உயிரெழ காலனை வீழென

உடலில் ஒளியெழ பூரண நீடென

நிலனில் நிலையென யாருள யாரில  - மொழிவாயே

 

கடலின் அலையென ஓடியு மாடியு

மணலின் அளவென சூடிய தேகமு

மனதின் மயமென மாறியு மீதுளஐயகோவே

 

மனதில் சிவபதி பாடவு மாடவு

மலரின் சிவகதி கூடவு மீளவு

முலகில் சிவசிவ தேகமு மானனை – மகிழேனே

 

அகவல் படிபடி ஜோதிய மாமலை

அருளைப் பிடிபிடி ஞானச பாபதி

நடுவில் அடிமுடி காணசி வாசிவ – எனதானே

 

மரணம் அடியனை மேவிய போதுனை

சரணம் எனஉனை நாடிய வாறெனை

அமரன் இவனென ஊரறி வாயுறை – பெருமானே.

-தி.ம.இராமலிங்கம்.








No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.