Sunday, April 19, 2020

சீனா - CHINA


சீனா
தி.ம.இராமலிங்கம்


இன்று உலக மக்கள் அனைவராலும் உச்சரிக்கப்படும் நாடு “சீனா”. காரணம் அங்குதான் உருவாக்கப்பட்டது அல்லது பரவியது ”கொரோனா – கோவிட்-19” என்கின்ற உயிர்கொல்லி உயிரி. உலக மக்கள் மடிவதற்கும், உலக பொருளாதாரம் அழிவதற்கும் முக்கிய காரணம் சீனர்கள்தான் என்று உலக மக்கள் கொதிக்கின்றனர். சீனர்கள் ஏன் இவ்வாறு செய்தனர்? சீனர்கள் பயங்கரவாதிகளா? தற்போது சீனாவை ஆளும் திரு.சி ஜின்பிங்க் (Xi Jinping) பயங்கரவாதியா? உலகை ஆதிக்கம் செலுத்த சீனா இவ்வாறு செய்ததா? என்றெல்லாம் கேள்வி எழுகின்றது. சீனர்கள் உண்மையில் யார்? என்று பார்க்க எனது மனம் என்னைத் தூண்டியது. ஒரு நாட்டின் மக்களை பற்றி அறிய அவர்கள் பின்பற்றும் அரசின் கொள்கையை அறிவதைவிட அவர்களுடைய ஆணி வேர் எங்கிருக்கின்றது? என்று பார்த்தால் தெரிந்துவிடும். மக்கள் பின்பற்றும் மதம்தான் அவர்களுடைய ஆணிவேர். சீனர்கள் பயங்கரவாதிகளாக இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்கள் பின்பற்றும் மதம் இடங்கொடுக்கின்றதா? என்று பார்க்க முனைந்ததின் விளைவே இச்சிறிய ஆய்வு.

சீனமக்களின் மதம் எதுவென்று கேட்டால்?... நாம் உடனே இந்தியாவிலிருந்து சென்று ”புத்த மதம்” என்போம். உண்மைதான். புத்த மதம் மிகப்பழமையான மதம். அன்பு நிறைந்த மதம். ஆன்ம நேயத்தை போதித்த மதம். உயிர்க் கொலையை மறுத்த மதம். புலால் உண்பதை கண்டித்த மதம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று போதித்த மதம். ஆனால் சீனா உட்பட புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளில் உள்ள மக்கள் புத்த மத போதனைகளுக்கு நேர்மாறாக இருப்பதை பார்க்கின்றோம். புத்த மதக் கொள்கைகளை அவர்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டார்கள். புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளில் பெரிய பெரிய புத்தர் சிலைகள் அமைத்து பக்தி மார்க்கத்தில் வழிபாடு செய்கின்றார்கள். அந்த வழிபாட்டை பார்க்கும் அந்நியர்கள் மனதில், “இந்த பூனையும் பால் குடிக்குமா?” என்று அவர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலத்தின் மீதும் மிகுந்த மரியாதை உண்டாகும். ஆனால், உண்மையில் புத்தர் சொன்ன அடிப்படை (ஆணி வேர்) ஒழுக்கங்களை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.



உலக மாந்தர்களின் துன்பத்திற்கு உண்மையான காரணம் என்ன? என்று கண்டுபிடித்து சொன்னது புத்தம். ஆனால் இன்று உலக மக்களின் துன்பத்திற்கு புத்த மதத்தை சார்ந்தவர்களே காரணமாகிவிட்டார்கள். புலால் உண்ணக்கூடாது என்று சொன்ன புத்த மதத்தை பின்பற்றும் சீனர்கள்தான் இன்று உலகிலேயே கொடூரமானவர்களாக இருக்கின்றார்கள். அதாவது, நாய், பூனை, பன்றி, ஆடு, மாடு, கோழி, முட்டை, பாம்பு, உடும்பு, மீன், பூரான், பூச்சி வகைகள் இப்படி எதனையும் விட்டு வைக்காமல் கொடூரமான முறையில் அவைகளை உண்கின்றார்கள். இவர்கள் மத ஒழுக்கத்தையும் பின்பற்றுவதில்லை, மனித ஒழுக்கத்தையும் பின்பற்றுவதில்லை. சீன அரசும் தம் மக்களை முறைபடுத்த தவறி விட்டது. தாங்கள் செய்வது தவறு என்கின்ற எண்ணமே வராத அளவிற்கு அம்மக்கள் சென்றுவிட்டனர். எல்லாம் சகஜநிலையாகிவிட்டது. அவர்களை மதமும் கட்டுப்படுத்தவில்லை, அரசும் கட்டுப்படுத்தவில்லை. இவ்வளவு அட்டூழியம் செய்யும் சீனர்கள் தம் இன மனிதர்களையும் சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும்?  பிற உயிர்களை கொலை செய்பவன், மனிதனையும் கொலை செய்ய அஞ்சமாட்டான். காரணம் மட்டுமே அவனுக்குத் தேவை. காரணம் பிறக்கும்போது காரியம் முடிந்துவிடும். உலக நாடுகளை அடக்கி ஆளவேண்டும் என்கின்ற சீனர்களின் காரணமே கொரோனா என்கின்ற காரியத்தில் முடிந்திருக்குமோ? என்கின்ற அச்சம் இயல்பாக நமக்கு எழுகின்றது.

இன்றைய உலகில் தான் சார்ந்த ”மதம்”தான் ஒரு மனிதனை அடையாளப்படுத்துகின்றது. இன்றைய உலகில் ஆன்ம நேயத்தை வலியுறுத்தும் மதங்கள் மூன்றுதான். இந்து, புத்தம், ஜைனம் இவை மூன்றுந்தான் ஆன்ம நேயத்தை சொல்கின்றன. இந்து மதம் ஆன்ம நேயத்தை சொன்னதே தவிர அதனை வலியுறுத்தவில்லை. இந்து மதத்தில் தென்னாட்டில் “சைவம்” என்கின்ற சமயமே உண்டு. சிவபெருமான் அதன் கர்த்தர். ஆனால் சைவ சமயத்தை பின்பற்றும் பெரும்பாலர்கள் அசைவர்கள்தான். இந்து மத வடநாட்டு வேதங்கள் உயிர் பலியிடுதலை வழிபாடாக சொல்லியிருக்கின்றது. அதனால் இந்து மதம் “ஆன்ம நேய விடயத்தில்” தோல்வியை தழுவுகின்றது. புத்தம், ஜைனம் இவை இரண்டு மதங்களும் ஆன்ம நேயத்தை சொன்னதுடன் மட்டுமல்லாது அதனை வலியுறுத்துவும் செய்கின்றன. புத்த மதத்தில் ஹீனயான புத்தர்கள் ஆன்ம நேயத்தை கடைபிடிக்கின்றார்கள். உலகில் இவர்கள் சொற்பமே. புத்த மதத்தின் மற்றொரு பிரிவான மகாயானமே உலகெங்கும் உள்ளது. இப்பிரிவினர் ஆன்ம நேயத்தை கடைபிடிப்பதில்லை. மேலும் புத்த மதத்தில் கடவுள் புறக்கனிக்கப்படுகின்றார். கடவுள் இல்லாத ஒழுக்க நெறி தீய விளைவையே தரும். எனவே ஆன்ம நேயம் சொன்ன புத்த மதமும் தோல்வியடைகின்றது. அடுத்ததாக ஜைன மதத்தில் ஆன்ம நேயம் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் கடவுள் மறுக்கப்படுகின்றது. அதனால் ஜைனமும் தோல்வியடைகின்றது. இன்றைய ஜைனர்கள் பக்தி வழியில் நடக்கின்றனர். அது விதிவிலக்கு.

மற்ற மதங்கள் எல்லாம் மனித நேயத்தை மட்டுமே வலியுறுத்துகின்றன. அதாவது முகமதியம், கிறுத்துவம் போன்ற மதங்கள் ஆரம்பத்திலேயே தோல்வியடைகின்றன. இவர்களுக்கு “ஆன்ம நேயம்” என்றால் என்னவென்றே தெரியாது. இவர்கள் மதம் போன போக்கில் போவார்கள். இவ்வுலகில் மதம் சொன்னதைத்தாண்டி “நல்லது” என எதுவுமில்லை என்ற வாதம் இவர்களுடையது. எனவே இம்மதங்களும் தோல்வியடைகின்றன. (இவ்விரு மதங்களை பின்பற்றுபவர்களில் ஆன்ம நேயர்களும் உள்ளனர். அவர்கள் விதிவிலக்கு.)


இதனை எல்லாம் ஆராய்ந்த வள்ளற்பெருமான், “மதங்கள் எல்லாம் பொய் பொய்யே…அவற்றில் புகாதீர்” என்று உலக மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கின்றார். கேட்பார் யார்? ஆன்ம நேயம் உள்ள மக்கள் வசிக்கும் உலகில் போர் வருமா?, மனிதனை சுற்றியுள்ள மற்ற உயிர்கள் கொலையுறுமா? மதம் தலை தூக்குமா? எங்கும் அமைதி அல்லவா நிலவும்! அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் நினைப்பவன், எவ்வாறு மனித உயிர்களை கொல்ல நினைப்பான்? அதனால்தான் வள்ளலார் “சன்மார்க்கர்கள் உலகை ஆள வேண்டும்” என்கின்றார்.

சரி… விடயத்திற்கு வருவோம். சீனர்களில் பெளத்தம் சார்ந்தவர்கள்தான் உள்ளார்களா? என்றால் இல்லை. அந்நாட்டில் பெளத்தம் அல்லாது ‘கன்பூசியம்’ மற்றும் ‘தாவோயிசம்’ என்கின்ற மிகப்பழைமையான மதங்களையும் சீனர்கள் இன்றும் பின்பற்றுகின்றனர். இவ்விரு மதங்களை பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

கன்பூசியம்:
சீனாவில் கன்பூசியஸ் (Confucius) அவர்கள் கி.மு.551-ல் பிறந்தார். கி.மு.479-ல் இறந்தார். இவர் போதித்த மெய்யியல் கோட்பாடே கன்பூசியம் என்று வழங்கப்படுகின்றது. சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இன்றும் இவரது கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.


கடவுள் நன்மை, தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகின்றார். நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர்” என்கின்றது கன்பூசியம். எவ்வளவு உண்மை இதில் பொதிந்துள்ளது பார்த்தீர்களா! இவர் சொன்ன இந்த இரண்டு வரிகளை விளக்க வேண்டுமானால், நீண்டு எழுதிக்கொண்டே இருக்கலாம். சரியானவர்களால் மட்டுமே சரியானதை தேர்வு செய்ய முடியும். மற்றவர்கள் சரியில்லாததை சரியானதாக எடுத்துக்கொள்வார்கள். உலகில் உள்ள பெரும்பாலர்கள் சரியில்லாதததையே சரியானதாக எடுத்துக்கொள்கின்றனர்.

இவருடைய தத்துவங்கள் தனிமனித ஒழுக்கங்களையே சார்ந்துள்ளது. எனினும் ஆன்ம நேயம் என்பது இவருடைய தத்துவத்தில் இல்லை. ”ஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு கன்பூசியசிடம் வந்தது, உடனே அவர் கேட்ட கேள்வி மனிதர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா? அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார்.”  இவரது கருத்துப்படி குதிரை சிறிய உயிரினமானாலும், குதிரைகளுக்கு என்னவானது என்றுதானே முதலில் கேட்டறிந்திருக்க வேண்டும். இல்லையே!. ஆனாலும் இவருடைய தத்துவங்களை ஆன்ம நேயத்துடன் பின்பற்ற ஏதுவாகவே உள்ளது. (கடவுள் நம்பிக்கையுடனும் ஆன்ம நேயத்துடனும் நாம் இவ்வுலகில் உள்ள எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம். ஆன்ம நேயத்துக்கு தடையாக உள்ள மதக்கோட்பாடுகளை நீக்கிவிட்டு மற்றதை பின்பற்றினால் அனைத்து மதங்களும் நல்லனவையே) கன்பூசியத் தத்துவங்களில் சிலதை பார்க்கலாம்…

உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.

ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் லஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ஆட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர்.

"நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்".

"இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை".

"உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்".

"சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்".

கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி, “என் வாயில் என்ன தெரிகிறது?” என்றார். “நாக்கு” என பதில் அளித்தார் சீடர். “பற்கள் இருக்கிறதா?” என்று கேட்டதும், “இல்லை” என்றார் சீடர். “இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்றார் கன்பூசியஸ். எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார் சீடர்.
“நாக்கு மென்மையானது. பல் வலிமை மிக்கது. நாக்கு பிறந்தது முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான் முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது. நாக்கு அப்படியே உள்ளது. நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள் வாழ்வீர்கள்” 
1. நல்ல பண்புகள்.
·         நல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
·         நல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.
·         நீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.
·         நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
·         உயர்ந்த குணங்களைப் பின்பற்றவேண்டும்.
·         கலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
·         நல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.
2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்
·         அவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
·         ஆர்வத்துடன் உழைப்பார்கள்.
·         சோம்பலாக இருக்கமாட்டார்கள்.
·         பெரியவர்களை மதித்து நடப்பார்கள்.
·         புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.
·         அன்போடு பழகுவார்கள்.
·         நிலைமாறாமல் இருப்பார்கள்.
·         தங்களைப்பர்றிப் பெருமையடிக்க மாட்டார்கள்.
·         ஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.
·         அனைவரையும் அரவணைப்பார்கள்.
·         எல்லோரிடமும் சமமாகப் பழகுவர்.
·         தர்மத்தின் பாதையில் நடப்பார்கள்.
·         சட்டத்தை மதிக்கிறார்கள்.
·         சுதந்திரமாக வாழ்வார்கள்.
·         பொறாமைப்பட மாட்டார்கள்.
3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்
·         பணிவன்பு
·         சகித்துக்கொள்ளும் தன்மை
·         சக மனிதர்கள் மீது நம்பிக்கை
·         விடாமுயற்சி
·         கருணை
4. மென்மையான குணங்கள் எவை?
·         மனஉறுதி
·         விடாமுயற்சி
·         மென்மையாகப் பேசுவது
5. கெட்ட குணங்கள்
·         பாசாங்கு செய்தல்
·         கோபப்படுவார்கள்.
·         சண்டை செய்வார்கள்.
·         வதந்திகளை பரப்புவார்கள்.
6. படிப்பு
·         சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்
·         படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
·         உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.
·         நல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.
·         ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.
7. தலைவர்
·         பதவிக்கு மரியாதை கொடுப்பார்.
·         நம்பிக்கைக்குரியவர்.
·         உயிரைத் துச்சமாக மதிப்பர்.
·         நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.
·         நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.
·         அமைதியாக இருப்பார்கள்.
8.கடவுள்,கோயில்,சடங்குகள்
·         கடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.
·         பெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.
9. வெறும் சில
·         கெட்டதை எண்ணாதே
·         நேர்மையின் வழியில் நட
·         தன்னடக்கத்துடன் இரு
·         மனஉறுதியுடன் இரு
·         கண்ட நேரத்தில் சாப்பிடாதே
·         வயிறு நிறையச் சாப்பிடாதே.
·         மற்றவர்களின் பொருள்மீது ஆசைபடாதே
·         எளிமையாக இரு
·         தவறு செய்தவர்களை மன்னித்திடு

தாவோயிசம்:
தாவோயிசமும் சீனாவின் மிகப் பழமையான தத்துவங்களாகும். தாவோயிசத்தின் வேர்களானது கி.மு 4 ஆம் நுாற்றாண்டு வரையாவது செல்கிறது. ஆரம்பகால தாவோயிசம் அதன் அண்டவியல் கருத்துக்களை இயற்கைவாதிகளின் தத்துவங்கள் (இங்யாங்) மற்றும் இயற்கைவாதிகள் வசமிருந்தும், சீன கலாச்சாரத்தின் பழமையான நூல்களில் ஒன்றான யிஜிங் இடமிருந்தும் பெற்றுள்ளது எனலாம். இந்த நுாலானது, இயற்கையின் மாற்று சுழற்சிகளுக்கு இணங்க மனித நடத்தையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு தத்துவம் சார்ந்த வழியை விவரிக்கிறது. லாவோ சீ (சீனம்: 老子; பின்யின்lǐozǐவேட்-கில்சு: லாவோட்சு) என்ற கற்பிதக் கோட்பாடு கொண்ட தாவோ தே ஜிங் என்ற கையடக்கப் புத்தகமும் பின்னர் ஜுவாங்சி எழுதிய எழுத்துக்கள் கொண்டுள்ள கருத்துக்களே தாவோயிச மரபின் மூலக்கருத்துக்களின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

மாறுதல் தானாக நிகழும் என்பது லாவோ சீ கூறிய கோட்பாடு. இதுவே 'தாவோயிசம்' என அழைக்கப்பட்டது. இராபினெட் அவர்கள் தாவோயியம் வெளிப்படுவதற்கான நான்கு கூறுகளை அடையாளம் கண்டுள்ளார். அவை:
1.   தத்துவார்த்த தாவோயியம், அதாவது தாவோ தே ஜிங் மற்றும் சுவாங் சி
2.   பேரின்பம் அல்லது மெய்யின்பத்தை அடைவதற்கான உத்திகள்
3.   நீண்ட வாழ்க்கை அல்லது சாவின்மையை அடைவதற்கான வழிமுறைகள்
4.   ஆவிகளைத் துரத்தும் நடைமுறை
ஓஷோ அவர்கள் "தாவோ"இயத்தின் கருத்துகளை முன்வைத்தும் 'சுவாங்க்தஸு' கூறிய பொன்மொழிகளை முன்வைத்தும் "நீங்கள் நிறைய சேர்த்து வைத்துள்ளீர்கள். மிகவும் நிறைய சேர்ந்து விட்டதால் உங்களுக்குள் எதுவும் ஊடுருவி செல்ல முடியாது. உங்கள் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. நீங்கள் மறையும்போது, நீங்கள் இல்லாதபோது கதவுகள் திறந்து கொள்கின்றன. பிறகு, நீங்கள் அளவிட முடியாத விண்ணைப்போல் ஆகிவிடுகின்றீர்கள். இதுதான் உங்களுடைய இயற்கைத் தன்மை. இதுதான் 'தாவ்(TAO)' என விளக்கம் தருகிறார்.

டாடே சிங் மற்றும் சுவாங்சியால் நிறுவப்பட்ட டாவோயிசம் முதலில் ஒரு தத்துவமாக உருவெடுத்து பின்னா் ஒரு மதமாக மாறியது. டாவோ என்னும் சொல்லிற்கு “பாதை” “வழி” என்று பொருள். ஆனால் இது மெய்ப்பொருள் குறித்து ஆய்வு செய்யும் இயலில் உணரமுடியாத விளக்க முடியாத அண்டம் முழுவதும் பரவியுள்ள ஒரு சக்தியைக் குறிக்கும். அனைத்து சீன தத்துவங்களும் நன்னெறிவாழ்க்கை வாழ சரியான வழியைத் தேடும் முயற்சியாக இருந்தாலும், டாவோயிசம் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கருத்துகளைச் சுட்டுவதால் இதற்கு டாவோயிசம் எனப் பெயா் வந்தது. இது செயலற்ற தன்மை (wu wei), மென்மையின் பலம், தன்னிச்சை, ஒத்திசைவு போன்றவற்றைப் போதிக்கின்றது. கன்பூசியஸ் அறிவுரைகளுக்கு மாற்றாக இது தோற்றமளித்தாலும், “புறத்தில் கன்பூசியஸ் அறிவுரையைப் பின்பற்றவும் அகத்தில் டாவோயிசத்தைப் பின்பற்றவும்” என்னும் மரபுத் தொடா்புக்கு ஏற்ப இரண்டு தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ளும்படி வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உலகை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணி மேற்கொள்ளப்படும் பல செயல்கள் உண்மையில் ஊறு விளைவிக்கின்றன என்ற அசைக்க முடியாத எண்ணத்தைக் கூறி இந்த உலகை மேம்படுத்த இது போன்று இயற்கையையோ மனித நடவடிக்கைகளையே ஊறுவிளைவிக்கும் செயல்களை செய்யாமல் தடுப்பதை வலியுருத்துகிறது. ஒற்றுமையாக இருப்பதும் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை மேற்கொள்வதுமே சிறந்த வழியாகும் என்று வலியுறுத்துகிறது. 

கிறுத்துவம்:
சீனா 1949 – ஆம் ஆண்டு முதல் பொதுவுடமைத் தத்துவத்தை கடைபிடித்துவரும் நாடாகும். பொதுவுடமை என்பது மதத்தை வெளியேற்றி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். எனவே சீனாவில் அதன் பண்டைய மதங்களான புத்தம் (புத்தம் இந்தியாவில் தோன்றி சீனாவிற்கு செல்லினும், அது அந்நாட்டின் கலாச்சாரத்தை ஏற்று சீன புத்தமாக மாறியது), கன்பூசியிசம், தாவோயிசம் ஆகிய இவை மூன்றும் சீனாவின் கலாச்சாரத்துடன் இணைந்த மதங்களாகும். இவையின்றி கிறுத்துவமும், முகமதியமும் சீனாவில் ஊடுறுவிய மதங்களாகும். அதனால் இந்த இரண்டு மதத்திற்கும் சீனாவில் அதிக கட்டுப்பாடு உண்டு. இவ்விரு மதங்களும் சீன கலாச்சாரத்திற்கு மாற வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சீனாவின் அரசியல் சரத்து 36, மத நம்பிக்கையில் சீனர்களுக்கு முழு சுதந்தரத்தை அளிக்கின்றது. ஆனால் சுதந்தரம் என்பது, சட்டத்தின் அனுமதியில்லாமல் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்ற அர்த்தம் கிடையாது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சீன அரசு.
சீனாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், கிறுத்துவ வழிபாட்டு தலங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சர்சுகளின் வழிபாட்டுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர்.

முகமதியம்:
கிறுத்துவர்களை போலவே சீனாவில் இஸ்லாம் மதத்தினரும் தங்களது மத அடையாளங்களை இழந்து மிகுந்த கட்டுப்பாடுகளுடனே வாழ்கின்றனர். சோவியத் யூனியன் பிளவுபட்டதிற்கு வஹாபிகளும், மிஷனரிகளும் முக்கிய காரணம் என சீனா நம்புகின்றது. எனவே இவ்விரு மதத்தத்துவங்களை சீனா விரும்புவதில்லை. அடக்கியே ஆள்கின்றது. மசூதி சீர்திருத்தம் என்ற பெயரில் கஷ்கர் பகுதியில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.  

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:
சீனாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாச்சாரத்திற்கு முழுமையாக மாறிவிட வேண்டும் என அந்த நாட்டில் 2019-ஆம் ஆண்டு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்லாமிய மக்கள் தொழுவது, நோன்பு இருப்பது, தாடி வைப்பது, ஹிஜாப் அணிவது சட்டப்படி குற்றமாகும் என சீனாவின் அதிகாரப்பூர்வ “ குளோபல் டைம்ஸ் “ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. உலகமயமாக்கலில் மதச்சார்பற்ற தேசம் உருவாவதை பற்றி பேசினாலும் மதச் சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மதச் சண்டைகளால் சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைகிறது.
சீனா மிகப்பெரிய கம்யூனிஸ நாடாக இருந்தாலும் அவர்களின் கலாச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆகையால், அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், அரசியல் உள்ளிட்டவையில் பிற இன மக்களையும் சீன கலாச்சாரத்திற்குள் கொண்டு வர சீனமயமாதலை மேற்கொண்டு வருகின்றனர். சீனமயமாதலின்படி, சீனாவில் இஸ்லாம் பழகுவது, படிப்பது குற்றமாகும். பெண்கள் ஹிஜாப் அணிவது, ஆண்கள் தாடி வளர்ப்பது, நோன்பு இருத்தல், தொழுகை செய்வது குற்றமாகக் கருதப்படும். இது தொடர்பாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
18 வயதிற்கு குறைவானவர்கள் மசூதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சியில் பணியாற்றுபவர்கள் ரம்ஜான் கொண்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. உய்கார் இன இஸ்லாமிய பெண்கள் இரண்டாவது குழந்தை கருவுற்று 9 மாதங்கள் முடிந்தாலும் கூட கரு கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றது. சீனாவை விட்டு வெளியேற கூடாது என்பதற்காக அவர்களின் பாஸ்போர்ட் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட வேண்டும்.
கம்யூனிஸ நாடான சீனாவில் இஸ்லாம் தவிர கத்தோலிக், புத்த மதம், டாவோயிசம், புரோட்டஸ்டன்ட் உட்பட 5 மதப் பிரிவுகள் உள்ளன. சீனாவின் சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் முயற்சி இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் என்ற பார்வை இருக்கும். அது தவறாகும்.
“ 2017 செப்டம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள ஐந்து முக்கிய மதங்களின் மன்றங்கள், சீன பண்பாட்டுடன் மதங்கள் ஒருங்கிணைந்த ஒன்றாக இருப்பதற்கு ஒருமித்தமாக சம்மதம் தெரிவித்ததாக ” குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் ஊடுறுவிய மதங்கள் தங்களது சுதந்தரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை சீன நாட்டிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
சரி அன்பர்களே… நமது அண்டை நாடான சீன மக்களின் கலாச்சாரமும், மதங்களும் அவர்களை ஒரு சீரான ஒழுக்கத்துடனே நடைபயில வைத்துள்ளன. ஆட்கொள்ளி உயிரிகளை ஆய்வகத்தில் உருவாக்கி, அதனால் தனது ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மற்றவர்களுக்கு இரண்டு கண்ணு போகவேண்டும் என்ற நோக்கில் அதனை பரவ விட்டிருப்பார்களோ? என்ற ஐயம் எனக்கு ஏற்படவே செய்துள்ளன.
மதம் காட்டும் வழி மறைமுகமாக இருந்தாலும், வெளிப்படையாக சட்டத்தின் ஆட்சிதான் அங்கு நடைபெறுகின்றது. எனினும் அம்மக்களுக்கு ஏன் இந்த கொலை வெறி? எல்லாவற்றிக்கும் அடிப்படை “ஆன்ம நேயம் இல்லை” என்பதே வெளிப்படையாக தெரிகின்றது. இவ்வுலக மக்கள் ஆன்ம நேயத்தை உணர வேண்டும். ஆன்ம நேயம் வந்துவிட்டால், எங்கும் அமைதி அமைதியே. பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற நோக்கமும், பொருளாதாரத்தில் வல்லரசாக வேண்டும் என்ற எண்ணமும் சீன நாட்டினை குறுக்கு வழியில் ஆனம நேயமற்ற, மனித நேயமற்ற வழிகளில் இட்டுச் செல்கின்றது. எண்ணற்ற தத்துவ ஞானிகள் அவதாரம் செய்த சீனா ஒரு புனித பூமியாகும். இன்றைய சீனர்கள் அதனை உணர்ந்து தங்களது செயல்பாடுகளை திருத்திக்கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல ”உண்மை” அவர்களை மன்னித்து நேர்வழியில் அவர்களுடைய எண்ணங்களை அடைய வழிகாட்ட வேண்டுமென வேண்டி முடிக்கின்றேன். நன்றி.
தி.ம.இராமலிங்கம்.

For e-book
https://drive.google.com/file/d/1h6u9OrR2qZHPRIfjWB2jPYKz6oAV-LU2/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.