பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த கிறுஸ்து
ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை
குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
ஓ... இறைவா... உனது அருள் பார்வை எங்கே சென்றது? உனது
அன்புக் கரங்கள் எங்கே சென்றது? உனது குறைகேட்கும் காது எங்கே சென்றது? இவ்வுலகில்
மனிதர்களாக பிறந்த நாங்கள் சுகமாக வாழ முடியாமல் அல்லலில் தவிக்கிறோமே! எங்களை
துன்பத்திலிருந்து தூக்கிவிட மறுத்து, உனது கைகள் குறுகிப்போகின்றதா? எங்களது துயர
வார்த்தைகளைக் கேட்கமுடியாதபடி உனது காதுகள் மந்தமாகிவிட்டதா?
இறைவனுடன் பேசவே ஆசைப்பட்டேன் பேசினும்
குறையொன் றுள்ளதடி - கிளியே
குரல்கேட்க வில்லையடி. (அருட்பிரகாசர்-கிளிக்கண்ணிகள்-31)
நான்பேசினும் என் நாயகன் பேசவில்லை
ஏன்என கேட்பாயடி - கிளியே
என்நிலை விளக்காயடி. 32
2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள்
தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச்
செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஜீவகாருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ
ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் போன்றவைகளை கடைபிடிக்காமல், இவ்வுலகில் அக்கிரமங்களே மிக
அதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் நமக்கும் இறைவனுக்கும் இடையில் நீண்டதொரு
பிரிவினை உண்டாகியுள்ளது. நாம் செய்யும் பாவச்செயல்களே, நமது வேண்டுதல்கள் மற்றும்
குறைகள் இறைவனின் காதுகளில் விழுந்துவிடாதபடி தடுக்கின்றன.
பேசும்மொழி அறியலையோ பாசமது புரியலையோ
வீசுகாற்றும் விளக்குமடி - கிளியே
வன்தமிழ் அறியுமடி. 33
3.
ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும்,
கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை
வசனிக்கிறது.
நாம் உண்பதற்காகவும் விரோதத்தினாலும் பிற உயிர்களை கொலை
செய்வதினால் நமது கைகள் இரத்தத்தாலும்
பாவத்தாலும் கறைபடிந்துக் காணப்படுகிறது. பொருளாசையால் நமது உதடுகளும் நாவும்
பொய்யே பேசுகின்றன.
வீதியோரக் கடைகளிலே விலங்கினங்கள் ஓலமிட்டு
நீதிக்கேட்டு கத்துதடி - கிளியே
நியாயம்கேட்டு மாளுதடி. 35
கொதிக்கின்ற நீரினிலே கோழிதனை
மூழ்கடிப்பார்
கொதிப்பார் இல்லையடி - கிளியே
கடவுளும் கருதாரடி. 36
4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி
வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக்
கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
மநுநீதிசோழன் ஆண்ட இம்மண்ணில் இன்று, நீதியை
தேடவேண்டியுள்ளது. வழக்காடு மன்றங்களில் சத்தியத்திற்கு வேலையில்லை. உலகமாயையில்
சிக்கிக்கொண்டு நாமெல்லாம் சுயநலத்திற்காகவும் சாதிமதங்களுக்காகவும் பொய்யே பேசி
அதன்மூலம் தீமையையும் நமக்குள் விரோதங்களையும் இவ்வுலகில் பெருமளவில்
விதைக்கிறோம்.
பொய்கள் பொலிந்துப் புறத்திருக்க உண்மை
தொய்ந்திருப்பது ஏனடி - கிளியே
தலைவனைக் கேளடி. 61
சாகாக் கல்விஅருளிச் சாகாவரம் தரவே
ஆகாயன் வருவாண்டி - கிளியே
ஆதாயம் தருவாண்டி. 90
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.