Monday, April 11, 2016

கல்பட்டு ஐயா - குருபூஜை

ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த கல்பட்டு ஐயாவின் குருபூஜை செய்தி



                  கல்பட்டு ஐயா - குருபூஜை

வள்ளலாரின் தொண்டர் கல்பட்டு இராமலிங்கம் ஐயா அவர்களின் 114-ஆம் ஆண்டு குருபூஜை 26-04-2016 அன்று வருகின்றது. அவ்வமயம் வடலூரில் உள்ள அவரது ஜீவசமாதிக்குச் சென்று வணங்கி நாமெல்லாம் அவரது அருளை பெறுதல் வேண்டும்.


வள்ளற்பெருமான் தம் தாய்க்கு அடுத்தப்படியாக, தமது தலையைவைத்து படுத்துத் தூங்கிய மடி எது என்றால், அது கல்பட்டு ஐயாவின் மடிதான். அவ்வகையில் வள்ளற்பெருமானுக்கு ஒரு தாயப்பனாக விளங்கியவர்தான் நமது கல்பட்டு ஐயா ஆவார். வள்ளலார் அவரிடம் கொண்டிருந்த உரிமையால் அந்த பாக்கியம் கல்பட்டு ஐயாவிற்கு கிடைத்தது.

வள்ளற்பெருமான் தம்மைப் போன்றே, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் "போதநாச அடிமை சாசனம்" ஒன்றை எழுதி ஒருவரிடம் காட்டி அதில் கையொப்பம் வாங்கி வைத்துக்கொண்டார். அந்த ஒருவர்தான் கல்பட்டு ஐயா. வள்ளற்பெருமான் மற்றும் கல்பட்டு ஐயா ஆகிய இருவர் மட்டுமே ஆண்டவரிடத்தில் போதநாச அடிமை சாசனம் எழுதி, தங்களை முற்றிலும் சுதந்தரமற்றவர்களாக ஆக்கியவர்கள் ஆவார்கள்.

இப்படிப்பட்ட பல தெய்வீக சிறப்புடைய கல்பட்டு ஐயாவை தொழுது சன்மார்க்க அறிவினை மேலும் மேலும் பெற முயலுவோம்.

                                                 - தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.