அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqOWJJYUZlcXRaQmM/view?usp=sharing
கட்டி பதிகம்
++++++++++++
நடு நின்று நடமாடுமென் நாயகனே
நான் படும் பாடுனக்கு
சடு குடுஆட்டம்
போல் உளதோ
சமரசம் உலாவும் மேனியின்
இடுப்பில் கட்டி
தோன்றியதை வெட்டி
எடுக்க வேண்டுமோ? அந்தோ
விடு விடுஎன்று
சொல்லாய்! உடனே
வடுவு மின்றி மறையுமே. 1
பாவம் பல செய்யுனும்
அருட்
பெருஞ் ஜோதியே நின்
ஏவல் என்னு டம்பில்
புகுந்து
இடையில் கட்டியாய் வந்தே
காவல் புரியுமுன்
மறக் கருணையை
காயம் தாங்குமோ? அந்தோ
ஆவலாய் பணிகிறேன்
மன்னித் தென்னை
ஆண்டு சுகமளித் தருளே. 2
கட்டித் தழுவுமுன்
அன்புக் கரங்கள்
கடிந் தெனை அடிக்குமோ?
கட்டி முடித்த சபையுள்
இடியென
கலங்க மொன்று வருமோ?
கட்டி என் இடையில்
பெருகி
கண் கலங்க வைக்குமோ?
கட்டிக் கரும்பென
இனிக்கும் நின்
கருணைக்கு இது அழகோ? 3
மருந்து வகைகள்
மறந்தாய் ஏனோ?
மருத்துவ மனைகள் பல
இருப்பதால் தானோ? இருந்தும் எனது
உடம்பி லுறும் கட்டி
கருவற தேய்ந்து
மறைய உன்
கடைக் கண் பார்வை
அருளால் மட்டுமே
முடியும் அன்றோ?
என் இராமலிங்க அப்பனே. 4
பதிகம் பாடிப் பணிந்து
உனைப்
பிரியா திருக்க நான்
அதிகம் ஆசை வைத்தேன்
ஐயாவே
என்னுடலில் நீ இருக்க
விதி செய்து, அவ்வுடலில் கட்டி
வந்துவீங்க, வலி எனக்கென
சதி செய்து சுகமாய்
நீஇருப்பது
சன்மார்க்க செயல் அன்றே. 5
பலவித பரோபகாரம்
செய்த என்
பதியே இன்று எனக்கு
நலம் அருள்வாய்
என்றே உனை
நாடி வந்தேன் குருவே
உலகம் வியக்கும்
வண்ணம் எனது
உடல் மேவியக் கட்டியை
சலத்தில் கறைந்த
உப்பாய் ஓரிரவில்
சடத்தில் மறைத்து அருளே. 6
பாவியேன் செய்த
பாவம் எதுவோ
புகலாய் என் இறைவா
காவி உடையுடன் காமக்கண்
கொண்டு
களிப் போர்க்கும் அருளினாய்
ஆவி போகஉயிர் கொலை
செய்து
உண் போர்க்கும் அருளினாய்
நாவினால் உனையே
பாடி மகிழும்
நாயேனுக்கு ஏனிந்த கட்டியே? 7
ஒன்றும் தெரியாதவன்
போல் என்னுள்ளே
ஒளிந்து ஒளிரும் ஒளியே
கன்றுக்கு பசிவந்தால்
மடிதேடி அருந்துமே
காயத்துள் கட்டி வரநானும்
உன்னருள் தேடி முட்டுகிறேன்
மடிகாட்டி
ஊட்டாயோ ஊன மகற்றி
என்னிடை கட்டியை
அகற்றாயோ வலி
அகற்ற விரைந்து வருவாயே. 8
புழுக்கள் விரும்பும்
உடலோ இது
புண்ணியன் புகுந்த புனித
விழுதுகளால் என்றும்
வீழாத மெய்
வார்ப்பன்றோ அந்தோ இதில்
இழுக்காக வந்தக்
கட்டியை உனது
எல்லாம் வல்ல அருளால்
பழுக்க விடாமல்
வடு தெரியாமல்
போகச் செய்வாய் புறத்தே. 9
உடலூரில் குடிகொண்ட
உன்னைத் தேடி
அயலூர் சென்று வந்தேன்
கடலூரில் எழும்
கதிரவனைக் காண
காரிருளில் சென்று வந்தேன்
சடமூரில் இறந்தாரைக்
காண பழச்
சாறு வாங்கிச் சென்றேன்
வடலூரில் ஜோதி காண
மக்களின்
வாட்டமெலாம் ஓடக் கண்டேனே. 10
+++++++++++++++++++++++++++++++++++++
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqOWJJYUZlcXRaQmM/view?usp=sharing
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.