Monday, August 7, 2017

சந்திர கிரகனம்

இன்று சந்திர கிரகனம் (07-08-2017)

இன்று இரவு இன்னும் சற்று நேரத்தில் வானில் சந்திர கிரகணம் நிகழ இருக்கின்றது. முழு நிலவனாது சற்று மறைந்து பிறகு தோன்றும். இரவு 10.51 மணிக்கு தொடங்கி 12.49 மணிக்கு முடிவடையும். இந்நேரத்தில் சன்மார்க்கிகள் எல்லாம் எல்லா உயிர்களும் இன்பமுறும் பொருட்டு திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை படிக்க வேண்டும். அகவல் படித்து முடிக்க நமக்குத் தேவையான இரண்டு மணி நேரமும் இந்த சந்திர கிரகணம் ஆரம்பித்து முடிக்கும் நேரமும் சமமாக இருப்பதை பயன்படுத்திக்கொள்ளவும்.


          சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி வருகின்ற அந்த இரண்டு மணிநேரத்தில் நாமும் நமது நடுவைக் குறித்து அகவல் படிக்க சூரிய ஒளி முழுதும் பூமியில் விழுவதைப் போன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பிரகாசம் முழுதும் நம்மீது படும்போது  நமது அஞ்ஞானத்திற்கு கிரகணம் தோன்றும். திறந்த வெளியில் (மொட்டை மாடி அல்லது காற்றோட்டமுள்ள இடம்) நிலவின் இருளில் விளக்கேற்றி அகவல் படிப்பது சிறந்தது. அன்புடன் தி.ம.இராமலிங்கம். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.