Friday, May 20, 2016

புத்த பூர்ணிமா



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:


புத்த பூர்ணிமா

21-05-2016 - இன்று ஆசிய ஜோதி சித்தார்த்தன் கவுதமப் புத்தர் பிறந்த நாள் (கி.மு.480) புத்த பூர்ணிமா என்றும், விசாகம் என்றும் உலகம் முழுவதும் உள்ள பவுத்தர்கள் கொண் டாடுகிறார்கள். நிர்வாணா என்று கூறப்படும் அவர்தம் மறைவு நாளையும் அனுசரிக்கிறார்கள்.


1950 மே மாதத்தில் கொழும்பில் கூடிய உலகப் புத்த அறிஞர்கள் மாநாட்டில் புத்தர் பூர்ணிமா நாள் உறுதி செய்யப்பட்டது.

1. நீ கேட்டது என்பதற்காகவே எதையும் நம்பிவிடாதே!

2. தலைமுறை தலைமுறையாக நடந்துவருகிற பழக்கம் என்பதற்காக எதையும் ஒத்துக்கொள்ளாதே!

3. பலர் பேசுகிறார்கள்; பலர் ஏற்றுக் கொண்டிருக்கி றார்கள் என்பதற்காக மட்டும் எதையும் நம்பிவிடாதே!

4. உன்னுடைய மத நூல்களில் கூறியிருக்கிறது என்பதற்காக மட்டும் எதையும் நம்பி விடாதே!

5. உனக்கு மூத்தவர்களும், உன் ஆசிரியர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டும் ஒன்றை நம்பிவிடாதே!

6. ஒரு சங்கதியை உற்றுக் கவனித்து, ஆராய்ந்து பார்த்து, உன் பகுத்தறிவுக்கு ஏற்றது என்றும், பிரத்தியட்ச அனுபவத்திற்குத் தெளிவாக உள்ளது என்றும் உனக்குத் தோன்றுமானால், அதனை ஏற்றுக்கொண்டு அதன்படி நட.

இவைதாம் உலக மானுடத்திற்குக் கவுதம புத்தர் பிரகடனப்படுத்திய அறிவு நெறிகள்.

இவற்றில் தெளிவாக ஊடுருவி நிற்பது பகுத்தறிவுச் சிந்தனை என்பது வெளிப்படை.. மதம் என்றால் நம்பு! நம்பினால் மோட்சம் - நம்பாவிட்டால் நரகம் என்றுதானே கூறுகிறது! தலைவிதி, கர்மப் பலன் என்று கூறும் எந்த மதத்தின் ஆணிவேரையும் வீழ்த்தக்கூடிய அறிவாயுதமே இவை என்பது தெரியவில்லையா?

புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டபோது ஒரு பார்ப்பனர் ஆத்மா பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேட்டார். அதற்குப் புத்தர் சொன்ன பதில்: ஆத்மா எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காகவே வைத்துக்கொள்வோம்;

கண்களைத் தோண்டிவிட்டால் அந்த ஆத்மாவால் பார்க்க முடியுமா? காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா? மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா? நாக்கை அறுத்து விட்டால் ருசி அறியுமா அந்த ஆத்மா? என்று கேள்விக்குக் கேள்விகள் மூலம் விடையிறுத்தார் கவுதம புத்தர்.

புத்தர் என்றால் யார் என்ற வினாவுக்குப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பளிச்சென்று பதில் பகன்றார். புத்தியைப் பயன்படுத்துபவன் ஒவ்வொருவனும் புத்தனே! என்றார்.

ஆரியர்களின் வருணாசிரமத்தையும், யாகப் பண் பாட்டையும் கடுமையாக எதிர்த்தவர் புத்தர். கவுதம புத்தர் சகாப்தத்தில் ஆரியம் வீழ்ச்சியுற்றது. அரசர்கள் பலர் பவுத்த மார்க்கத்தைப் பின்பற்றினர். பிற்காலத்தில் ஆரியத்திற்கே உரிய வஞ்சக - தந்திர முறைகளால் மன்னர்களைக் கைக்குள் போட்டு, பவுத்தத்தை அதன் சுவடு தெரியாமல் அழித்து முடித்தனர் இந்நாட்டில்.

பவுத்தர்கள், சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர். பவுத்த பள்ளிகள் இந்து மதக் கோவில்களாக மாற்றப்பட்டன. இன் றைக்கு இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில்கூட  புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வு நூல்கள் வெளி வந்துவிட்டன.
நன்றி-குடியரசு.



or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.