Tuesday, June 21, 2016

சட்ட சபை தேர்தல் - 2016



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

சட்ட சபை தேர்தல் - 2016

          தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட சபைக்கு ஒரே கட்டமாக மே 16-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ந் தேதி தொடங்ககி, ஓட்டு எண்ணிக்கை மே 19-ந் தேதி நடைபெற்றது.


          முன்பு எப்போதும் இல்லாத வகையில் தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளையும் ஊழல் புகார் தெரிவித்து அவைகளை ஆட்சி பீடத்தில் அமர வைக்காமல் செய்ய இம்முறை பல கட்சிகள் தனித்தனியே நின்று அவைகளை எதிர்த்தன. தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., வி.சி., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், நாம் தமிழர் மற்றும் சில கட்சிகள் எல்லாம் கூட்டனியிட்டும் சில கட்சிகள் தனித்தும் அந்த இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்தன.

          இறுதியில் தி.மு.க., கூட்டணி மற்றும் அ.இ.அ.தி.மு.க., கூட்டணி மட்டுமே வென்றன. இவற்றில் தி.மு.க., கூட்டணியைவிட அ.இ.அ.தி.மு.க., கூட்டணி 36 தொகுதிகளில் கூடுதலாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க., கூட்டணி 98 இடங்களிலும் அ.இ.அ.தி.மு.க., 134 இடங்களிலும் வெற்றிபெற்றது.

          1984-ஆம் ஆண்டிற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க., இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிப்பது இந்த 2016-ஆம் ஆண்டில்தான். இதன் மூலம் தற்போதய முதல்வர் மாண்புமிகு செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் மீண்டும் தமிழக முதலமைச்சராக மே-23-ஆம் தேதி பதவியேற்றார்கள். பதவி யேற்றவுடன் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ஐந்து முக்கிய திட்டங்களை செயல்படுத்த கையொப்பம் இட்டது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியினை அளித்தது.

          ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்ற மாண்புமிகு செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு சன்மார்க்க விவேக விருத்தி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

புதுவை

          புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் 08 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியை தழுவியது. மொத்தமுள்ள 30 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இதுதவிர அ.இ.அ.தி.மு.க., 04 இடங்களிலும் சுயேட்சை 01 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.


          புதுச்சேரியில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திரு. வி.நாராயணசாமி அவர்கள் முன்னால் மத்திய அமைச்சராக இருந்தவர். தற்போது இவர் சட்டமன்ற உறுப்பினாராக இல்லாத நிலையில் முதல்வராக பதவி ஏற்கிறார். இன்னும் ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் மூலம் தனது இருப்பை தக்கவைக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு உள்ளது.

          முதன்முறையாக புதுச்சேரியில் முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு.வி.நாராயணசாமி அவர்களுக்கு சன்மார்க்க விவேக விருத்தி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.