Sunday, February 26, 2017

காயத்ரி மந்திரம்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் ஜனவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

காயத்ரி மந்திரம்
===============




நாம் நமது “சன்மார்க்க விவேக விருத்தி”யில் சென்ற ஆகஸ்ட்-2016 ஆம் மாதம் வள்ளலார் அருளிய ‘காயத்ரி’ மந்திரத்தைப் பற்றி விளக்கமாக பார்த்தோம். ஆனால் இங்கே அதற்கு சற்று  விக்தியாசமான பார்வையில் அதே காயத்ரி மந்திரத்தை பற்றி சித்தர்கள் பார்வையில் பார்ப்போம்.

“ஓம் பூர்: புவ: ஸூவ:
 தத் ஸவிதுர் வரேண்யம்
 பர்கோ தேவஸ்ய தீமஹி
 தியோ: யோந: ப்ரசோதயாத்”
இதுதான் விசுவாமித்ர முனிவரால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட மந்திரம். இவர் காயத்தையே (உடல்) திரியாக எரித்து மகா மந்திர சக்தியான காயத்ரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்ரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளை அடைந்தார்.

மேலே உள்ளது மொழிமாற்றம் செய்யப்பட்ட மந்திரம் என்று தெரியவருகின்றது. அதாவது  தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு இம்மந்திரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்ச் சித்தரால் இயற்றப்பட்டதே காயத்ரி மந்திரமாகும். தமிழின் நுட்பங்கள் மற்றும் செறிவான மொழியியலை தாங்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டதெ சமஸ்கிருத மொழியாகும். (சம-இணை, கிருதம்-மொழி). காலப்போக்கில் இவ்வாறு மொழி மாற்றம் செய்யப்பட்டவைகளை ஆரியர்கள் தங்களுடையதாகக் கூறி அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட நம்பிக்கைகளை உட்புகுத்தி, கடவுளின் பிரதிநிதிகளாக தங்களை நிறுவிக்கொண்டு சடங்குகள், வழிபாட்டு முறைகள், பாவபுண்ணிய தீர்மானங்களை தமிழர்களின் மீது திணித்தனர்.

இன்னும் தெளிவாக சொல்வதாயின், பரிதிமாற்கலைஞரின் ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற நூலின் எட்டாவது பக்கத்து வரிகளை பார்ப்போம்,

“தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.”

இவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்டவைகளில் ஒன்றுதான் காயத்ரி மந்திரமாகும். காயம்=உடல், திரி=உயிர், மந்திரம்=காக்கும். உடலையும் உயிரையும் பேணிக் காக்கும் கவசம் காயத்ரி மந்திரம் எனப்படும். இதன் தமிழ் மூல மந்திரத்தின் மொழிபெயர்ப்பு அல்லது  இணையான உச்சரிப்புகளைக் கொண்டதே தற்போது  புழக்கத்தில் உள்ள சமஸ்கிருத மந்திரமாகும். இந்த மந்திரம் காலம் காலமாக குருமுகமாக மட்டுமே உபதேசிக்கப்பட்டு வந்தது. பரவலாக அறியப் படாமல் காயத்ரி மந்திரம் மறைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
          கருவூரார் என்ற சித்தரால் தமிழ் மொழியில் அருளப்பட்டதுதான் காயத்ரி மந்திரமாகும். இதுவரை நாம் அறியாத தமிழ் மந்திரம் இதுதான்,

          “ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக!
           தத்துவ வித்துக்கள் அரணாகுக!
           பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்!
           தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்!

இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது புழக்கத்தில் வைத்திருக்கும் காயத்ரி மந்திரத்தின் ஓசைகளை ஒத்திருப்பதை காணவும். இதன் மகத்துவத்தை காகபுசுண்டர் பின்வருமாறு கூறுகின்றார்,

          “மவுனமே இப்படித்தான் செய்யும் பொய்யோ
           வாய்க்குமல்லோ காயத்திரி வலுவே செய்யும்
           கெவுனமே மேல்கிளப்பும் தொழிலே தானே
           கேசரத்தில் ஏற்றி வைக்கும் சித்தி தானும்
           மவுனமேயென்று சொன்னார் முன்னோரெல்லாம்
           வந்தவர்கள் கண்டு கொண்ட வகையிதாமே
           ரவிதனை மறவாமல் நோக்கி நோக்கி
           காயத்ரி செபஞ்செய்து இருந்து பாரே”

திருமூலரும் இங்கே இணைகின்றார்,

          “காயத்திரியே கருது சாவித்திரி
           ஆய்தற்க்குவப்பவர் மந்திர மாங்குன்னி
           நேயத்தேரேறி நினைவுற்று நேயத்தாய்
           மாயத்துள் தோயோ மறையோர்கள் தாமே!

காயத்ரி சூரியனை நோக்கி சொல்லப்படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று கொண்டு அல்லது பத்மாசனத்தில் அமர்ந்துக்கொண்டு ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு முறை மனதுக்குள் உச்சரிக்க பலன் கிட்டும்.

          தமிழ் மொழிதான் அனைத்திற்கும் தந்தை மொழி என்று வள்ளலார் சொன்னது நினைவுக்கு வருகின்றது. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.