Monday, July 17, 2017

நாம் ஞானம் பெற்றுவிட்டோமா


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘ஜூன்-2017’ அன்று வெளியானது. 

நாம் ஞானம் பெற்றுவிட்டோமா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

நான் ஐந்து ஒழுக்கங்களை முழுமையாகக் கடைப்பிடிக்கிறேனா? ஞானம் அடைவதன் முதல் காலக்கட்டத்தில் நீங்கள் கொலைசெய்வதை, களவாடுவதை, தவறான பாலியல் உறவு கொள்வதை, பொய் பேசுவதை, போதை தரும் பொருட்களை உட்கொள்ளுவதை விட்டிருப்பீர்கள்.  இவற்றை இயல்பாகவே செய்திருப்பீர்கள்.  இவற்றைச் செய்யாமல் இருக்க முயற்சி எதுவும் தேவையில்லை.  உங்கள் உள்ளம்  திறந்திருக்கிறது.

மற்ற உயிர்கள் மீது உங்களுக்கு மதிப்பு இருக்கிறது. உங்கள் உள்ளம் நுண்ணிய உணர்வுள்ளதாகவும், கருணை நிறைந்ததாகவும் இருக்கிறது.  உங்களுக்கு ஒரு கொசுவைக்கூட கொல்லத் தோன்றாது.  கொசுவும் வன்முறை என்றால் நடுங்கும் என்பதை உணர்ந்துள்ளீர்கள். உயிர்களைக் கொல்ல உங்கள் நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை. அது மிகக் கொடுமையான செயல். அந்தச் சுமையை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இல்லை. இந்த மூடத்தனத்தை உங்களால் பொறுத்துக் கொள்ளவும் முடியாது........................................................

பொருட்களை திருடுவதை விட்டு விட்டிருப்பீர்கள். அவை வெறும் பொருட்களே.  திருடும் அளவுக்குச் செல்வதற்கு  உங்கள் நிலைமை அவ்வளவு மோசமானதா என்ன?   நீங்கள் எதைத் திருடப் போகிறீர்கள்?

  தவறான பாலியல் உறவு:  மேலும் நீங்கள் காமத்தில் மூழ்கிப் போகாததால், காம வெறி உங்களை ஆட்டிப் படைக்காததால், நீங்கள் இந்த ஒழுக்கத்தை மீறப் போவதில்லை.  மற்றவர்  உறவை முறிப்பதில்லை.   உறவுகளில் இன்னமும் ஆசை இருந்தால் வேறு ஆயிரம் வழிகள் இருக்கும் போது மற்றவரின் உறவைப் பாதிக்க  வேண்டியதில்லை. மற்றவர் உறவைப் பாதிப்பதில் எவ்வளவு தீங்கு உள்ளது என்பதையும், அது மிகவும் புண்படுத்தும் செயல் என்பதையும் உணர்கின்றீர்கள்.


நீங்கள் அத்தகைய மென்மையான உணர்வைக் கொண்டுள்ளீர்கள். அது இயல்பே. உங்களையே நீங்கள் உள் நோக்கிப் பார்க்க வேண்டும். நான் இந்த ஐந்து ஒழுக்கங்களுக்கேற்ப வாழ்கின்றேனா?  இல்லையென்றால் நான் இன்னும் ஞானம் பெறவில்லை. ஞானம் என்பதை தமிழில் எழுதினால் ஒரு வேளை நமக்கு ஞானம் கிடைத்தாலும் கிடைத்துவிடும். அதாவது “நான் இன்னும் அறிவு பெறவில்லை” .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.