Tuesday, December 6, 2016

வள்ளலாரின் புகைப்படம்

வள்ளலாரின் புகைப்படம்


கூடலூர் அப்பாசாமி செட்டியார் வீட்டில் வள்ளற்பெருமான் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். அவ்வீட்டில்தான் வள்ளற்பெருமானின் தலையில் பாம்புத் தீண்டி, அப்பாம்பு இறந்தது. காசியிலிருந்து வள்ளற்பெருமானைப் போன்ற உருவமுடைய ஒரு மகான் அவ்வீட்டிற்கு வந்து வள்ளலாரை சந்தித்து பிரசாதம் கொடுத்துவிட்டு உடனே மறைந்த சம்பவம் நடைபெற்ற வீடும் அதுதான். இன்னும் பல அற்புதங்கள் அவ்வீட்டில் நிகழ்ந்ததாக காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் பிரபந்தத்திரட்டில் நாம் படிக்கலாம்.

அப்படிப்பட்ட வீட்டில்தான், வள்ளற்பெருமானை புகைப்படம் பலமுறை எடுத்தும் அவரது உருவம் விழாமல் ஆடை மட்டும் விழுந்த அந்த அற்புத புகைப்படத்தை நான் எனது தந்தை தாயுடன் தரிசித்துள்ளேன்.
         
25-08-2016 அன்று அமெரிக்காவிலிருந்து திரு.சிவக்குமார் என்பவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்தப் படத்தை தாங்கள் பார்த்ததாக சொல்கிறீர்கள். அப்படம் எப்படி இருந்தது? அது தற்போது எங்கிருக்கின்றது? என்றெல்லாம் விவரமாக கேள்விகளை கேட்டார். நானும் எனது நினைவுகளை அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். அப்படத்தை எப்படியாவது மீண்டும் வெளிஉலகிற்கு கொண்டுவாருங்கள்! என என்னிடம் கேட்டுக்கொண்டார்.

நாங்கள் பார்த்த அப்படத்தின் நினைவுகள் எங்களை விட்டு என்றும் பிரியாது. அந்த நினைவுகளின் நிழலை அப்படியே பென்சிலால் அன்றே (உடனே) வரைந்து முடித்தேன். இப்படத்தினைப் பார்த்த எனது தாயார், ‘அப்படத்தில் வள்ளலாரின் இரு கண்களில் மட்டும் லேசாக ஒளி பிரதிபலித்ததாக கூறினார்கள். எனக்கு அப்படி பார்த்ததாக நினைவு இல்லை. நான் பார்த்தது வெறும் கருமை நிறம் மட்டுமே. ஒரு வேளை நான் மறந்திருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. வள்ளலாருடன் யாரும் அருகில் இல்லை. அவர் மட்டுமே தனியே நிற்பதாக அப்புகைப்படம் உள்ளது. மேலும் அவரின் பின்புறமும் ஒரே கருமை நிறமாகவே காணப்பட்டது. ஒரு வேளை சுவற்றின் முன்புறம் நின்று அப்புகைப்படம் எடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

வள்ளலார்  அமைத்துக்கொடுத்த விளக்கு கூண்டும், இந்த புகைப்படமும் அப்பாசாமி செட்டியாரின் வாரிசுதாரர்களிடம் இருக்க, வள்ளலார் எழுதிய சிலகுறிப்புகளும் மற்றும் சில பொருட்களையும் தருமச்சாலைக்கு கொடுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். சன்மார்க்க அன்பர்களுக்காக நாங்கள் இந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.  - TMR


8 comments:

  1. வள்ளலார் உண்மை புகைப்படமா

    ReplyDelete
    Replies
    1. மேற்காண்பது உண்மையான புகைப்படம் அல்ல. ஆனால் உண்மையான புகைப்படத்தை நான் கண்டேன். அதனை அப்படியே என் கைப்பட வரைந்துள்ளேன்.

      Delete
  2. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...

    ReplyDelete
  3. சிவ சிவ படிக்கும் போது எதோ இனம்புரியாத உணர்வு

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.