தம்மபதம்
11.
தமது மூத்தோரை இடைவிடாமல் மதிக்கும் பக்தி இயல்புடையவர்களுக்கு நீண்ட ஆயுள், அழகு,
மகிழ்ச்சி, வலிமை
என்னும் நான்கு பண்புகளும் வளர்கின்றன (109 )
என்னும் நான்கு பண்புகளும் வளர்கின்றன (109 )
12. அனைவரும் தண்டனையைக் கண்டு பயப்படுகிறார்கள்,
அனைவரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆதலால், அனைவரையும் தம்மை போல் கருதி, கொலை செய்யாமலிருப்பீர்களாக! கொலை செய்வதையும் ஊக்குவிக்காமலிருப்பீர்களாக! (129 )
13.
தனக்கெந்த நன்மையும் செய்யாத செயலினையும், தீமைமிகு செயலினையும் செய்வது மிக எளிதே; அனால்
நன்மை பயப்பதையும் நல்லதையும் செய்வதற்கு உண்மையில் மிக கடினம் (163)
14. உள்நோக்கில் நிறைநிலை உற்றவர், தம்மத்தில் நிலைத்து நிற்பவர், உண்மை உணர்ந்தவர், தன்கடன் கழித்தவர்,
இவரே மக்கட் இனிவராம். (217 )
15.புத்தர்கள் வழியை
மட்டுமே காட்டுவார்கள் (276)
16.உண்மையாகவே,
தியானத்தினால் தெள்ளறிவு (ஞானம்) உதிக்கிறது. தியானமில்லை என்றால், ஞானம் தேய்கிறது.
பெறுவதும்
இழப்பதுமாகிய இந்த இருவழிப் பாதையை அறிந்துக்கொண்டு, ஞானத்தை அதிகரிக்கும் வழியில்
ஒருவர் தன்னையே வழிநடத்திக் கொள்ளவேண்டும். (282)
17.தம்மத்தின்
தானம் அனைத்து தானங்களையும் வெல்லக்கூடியது. தம்மத்தின் சுவை அனைத்து
சுவைகளையும் வெல்லக்கூடியது. தம்மத்தின் மகிழ்ச்சி அனைத்து இன்பங்களையும் வெல்லக்கூடியது.
விருப்பின் (ஆசையின்) அழிவு அனைத்து துன்பங்களையும் வெல்லக்கூடியது.
18.பகைவர்
இடத்திலும் நட்புடனிருத்தல், வன்முறைக் கிடையிலும் அமைதியாயிருத்தல், பற்றுள்ளோர் இடையிலும்
பற்றற்றிருத்தல்
போன்ற
குணவானே உன்னத மனிதர் என்பேன். (406)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.