குழந்தை
பேறு
திருமணமான தம்பதியருக்கு
குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம் சொல்லி மாளாது.
அவர்களுக்காகவே தன்வந்திரி தமது வைத்திய காவியம் என்னும் நூலில் குழந்தை வரம் கிடைக்க
வழிவகை சொல்லியிருக்கின்றார்,
வாறான
மங்கையர்கள் கெற்பமாக
வறையுறேன் பசும்பாலும் வசம்புதானும்
நீறான
விழுதியிலை மூலிதானும்
நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி
காறான
பால்தனிலே குழப்பியேதான்
கனமாக விருவேளை கொண்டாயானால்
சேறான
கிருமியது அற்றுப்போகும்
செனிக்குமே பிள்ளையது செனிக்கும்பாரே.
செனிக்குமது
பிள்ளையது பிறக்கும்பாரு
தெளிவாகும் திரேகமது சொலிக்கும்பாரு
கனிக்குமே
யிந்தமுறை பொய்யாதையா
காசினியி லாருந்தான் சொல்லமாட்டார்
வனிக்குமே
முறையோடே செய்தாயானால்
மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு
பனிக்குமே
யிக்காவிய மதீதவித்தைப்
பாடினேன் தன்வந்திரி பாடினேனே.
பசும்பால், வசம்பு, விழுதியிலை, குப்பைமேனி
இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்தக்
கலவையை பசும்பாலில் கலந்து காலை, மாலை உண்டு
வர, கர்ப்ப கிருமிகள் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
இப்படி பிறக்கும்
குழந்தையின் உடல் பொலிவாக இருப்பதுடன், சிறந்த புத்திசாலியாகவும் இருக்கும். மிகவும்
அரிதான இந்த முறையை மற்றவர்கள் மறைத்து வைப்பார்கள். தன்வந்திரி இதனை பொதுவில் வைக்கிறேன்.
இது பொய்க்காது.
என்ன… அன்பர்களே…
தன்வந்திரி சித்தரின் வைத்தியம் செய்து மழலை செல்வங்களை ஈட்டுங்கள். சந்தேகம் ஏதேனும்
இருப்பின் சித்த வைத்தியரை தொடர்புகொள்ளுங்கள். விழுதியிலை என்பது என்ன? என எனக்குத்
தெரியவில்லை. அதனை தக்கவரிடம் கேட்டு அறிந்துக்கொண்டால் மற்றது எளிதாகக் கிடைக்கூடியதுதான்.
செய்து பாருங்கள்… பலன் கிடைத்தால் மறக்காமல் பிறருக்கும் சொல்லுங்கள். உங்களுக்கு
மகாகோடி புண்ணியம் கிடைக்கும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.