Tuesday, December 6, 2016

மாரணம்

மாரணம்

                        பாரப்பா வெள்ளியினால் தகடு தட்டி
                        பக்குவமாய் நசிமயவ என்று மாறி
                        நெடிதான நோய்களுக்கு கட்டினாக்கால்
                        மாரப்பா நோய்கள் எல்லாம் மாரணித்து போகும்
                        வஞ்சகருஞ் சத்துருவும் வகையுள்ளோரும்
                        வேரப்பா அற்றமரம் போலே போவோர்
                        மெய்யான மாரணத்தை விரும்பிச் செய்யே.

        வெள்ளியினால் ஆன தகட்டில் நமசிவயஎன்ற மந்திரத்தை மாற்றி நசிமயவஎன்று எழுதிக்கொண்டு அந்த எந்திரத்தை நீண்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டிக்கொள்ள வேண்டும். அதற்கு முன்னர் மாரண மந்திரமான ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகாஎன்பதை 1008 முறை தொடர்ச்சியாக செபிக்க வேண்டும்.

        செபித்த பிறகு அந்த யந்திரத்தினை கட்டிக்கொள்ள, நீண்ட நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். அதுமட்டுமல்ல, வஞ்சகர்கள், எதிரி இவர்களைப் போன்ற தீயவர்களும் வேரற்ற மரம்போல அவர்களை விட்டு நீங்கிவிடுவார்கள். இப்படிப்பட்ட மெய்யான மாரண கலையினை விரும்பிச் செய்யுங்கள் என்று அகத்தியர் உரைக்கின்றார்.

          மாந்திரிகத்தின் அட்டகாமங்களான வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் எனும் எட்டு பிரிவுகளில் மாரணம் என்ற கலையினை நாம் மேலே கண்டோம். மாரணக் கலையில் எதிரியை மரணமுறச்செய்யும் வித்தையும் உண்டு. அவ்வித்தை நாம் மேலே கண்டது அல்ல. எனினும் நமது முன்னோர்கள் நாம் நலமுடன் வாழ சில வழிகளை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதன் காரண காரியங்களை நாம் அனுபவித்தால் தான் அதன் உண்மை என்னவென்று தெரியும். எனவே மேலே கண்ட மாரண கலையினை நாம் தெரிந்துக்கொள்வோம். இதனை செய்து பார்க்கும் விஷப் பரிட்சையைத் தவிர்த்திட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.