Tuesday, December 6, 2016

பிறவிச் சக்கரம்


பிறவிச் சக்கரம்

இங்கு காணப்படும் சித்திரம் சமண சமய தத்வத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம்செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி, விலங்குகதி, நரககதி, மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.


பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.
மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின்மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.


1. ஏழு வியசனங்களை விட்டிருப்பவர் ஜைனர்

(ஏழு வியசனங்கள்: சூது, வேட்டை, திருடு, கள், புலால், பிறர் மனைவிருப்பம், வேசியர் தொடர்பு)

2. இரவில் உண்ணாது இருப்பர் ஜைனர்

( இரவு நேரத்தில் ஜீவ உற்பத்தி அதிகம். அதனால் உண்ணல், தின்னல், நக்கல், குடித்தல் என நால்வகை உணவையும் விடுதல் வேண்டும் அல்லது பயிற்சிக்காக குடித்தல் பொருளை நீக்கி மற்றைய மூன்றையும் விடலாம்)

3. தோல் பொருளை விலக்கி இருப்பர் ஜைனர்

(ஜைனர்களுக்காக மட்டும் செருப்பு, பெல்ட், நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக் முதலானவை தயா¡¢க்க லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் ஆண்டுதோறும் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. அதனால் கெட்ட பிறவிகளை தவிர்க்க இவற்றை கை விட வேண்டும்.)

4. கெட்ட வியாபாரம் செய்யாது இருப்பர் ஜைனர்

(கள், மதுக்கடை நடத்துதல், தோல் பொருளை விற்றல், சிகரெட், பீடி முதலானவற்றை விற்றல், விஷம், கத்தி, துப்பாக்கி போன்ற கொலைக் கருவி விற்றல் செய்யாது இருத்தல் வேண்டும்).

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.