Tuesday, December 6, 2016

அகிம்சை மொழிகள்

அகிம்சை மொழிகள்

எங்கே அன்பு இருக்கின்றதோ அங்கே வாழ்வு உயிர்த்திருக்கின்றது.

என் வாழ்க்கையே எனது அறிவுரை.

அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.

கண்ணுக்கு கண் என்னும் கொள்கை, உலகைக் குருடக்குவதில்தான் சென்று முடியும்.

பலகீனமானவர்களால் மன்னிக்க முடியாது. மன்னிப்பு உறுதி உடையொரின் பண்பு.

முதலில் உங்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். அடுத்து எள்ளி நகையாடுவார்கள். அடுத்து சண்டை பிடிப்பார்கள். அதன் பின்… நீங்கள் வென்றிருப்பீர்கள்!

உண்மையாய், பணிவாய், அஞ்சாது இருங்கள்.

நாடுகளுக்கு இடையேயான அமைதி என்பது தனிமனிதர்களுக்கு இடையேயான புரிதல் எனும் பலமான அஸ்திவாரத்தின் மேல் அமைக்கப்பட வேண்டும்.

என்றைக்கு அன்பின் சக்தியானது, அதிகாரத்தின் மீதான ஆசையை வெல்கின்றதோ அன்றைக்கு உலகம் அமைதி காணும்.

மனிதத்தின் மேலான நம்பிக்கையை இழக்கக் கூடாது. அது சமுத்திரத்தைப் போன்றது. அதன் சில துளிகள் அசுத்தமாய் இருப்பதால் சமுத்திரமே அசுத்தமாகி விடாது.

இவ்வுலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்.

குண நலனும் புனிதத் தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம்.

நேர்மையான ஒத்துழையாமையே அவ்வப்போது முன்னேற்றத்தின் நல்ல அறிகுறியாகின்றது.

மகாத்மாவின் பொன் மொழிகளை இந்தியர்களான நாம் கடைபிடித்து ஒழுக சபதமெடுப்பது, நாம் அவருடைய பிறந்த நாளான அக்டோபர் – 02-ஆம் தேதியை கொண்டாடுவோம். - TMR




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.