Tuesday, December 6, 2016

தம்ம பதம்

தம்ம பதம்

01.அவன் என்னை கடுமையாக பேசினான், என்னை  அடித்தான் என்னை தோற்கடித்தான், என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டான் என்பன போன்ற சிந்தனைகளுக்கு அடைக்களம் தரும் ஒருவரிடம் வெறுப்பு தணிவதில்லை.

        02.இந்த உலகத்தில், வெறுப்பை வெறுப்பால் ஒருபோதும் அணைக்க முடியாது. வெறுப்பின்மையால் (அன்பு) தான் அதை அணைக்க முடியும். இதுவே நிலையான தர்மமாகும்.

        03.இல்லனவற்றை உள்ளன வென்றும், உள்ளனவற்றை இல்லன வென்றும், தவறிய கருத்தை பேணிடுவோர்கள் உண்மையை என்றும் அடைவதேயில்லை.

        04.குறைபட வேய்ந்த கூரைவீட் டுள்ளே ஊடுருவிப் பெய்யும் மழையினைப் போலே முறைப்பட மேம்பாடுற்றிடா நெஞ்சில் ஊடுருவிக் காமம் உட்புகுந் திடுமே.

        05.இங்கும் துன்புறுகிறான் பின்பும் துன்புறுகிறான் இம்மை மறுமை இரண்டிலும் தீயவன் துன்பம் உறுகிறான் துன்புற்று அழிகிறான் தன்னுடைய மாசுறு செயல்களைக் கண்டே .

06.மனத்தை கட்டுப்படுத்துவது நன்று, மகிழ்ச்சியை அளிப்பது கட்டுடை மனமே,

        07.புரிந்து கொள்வதே கடினமாம் மனம், மிகு நுட்பமானதால், விரும்புமிடம் அதுதாவும்,  அறிவோர் மனம் அடக்குவோ ராக.;  அடங்கிய மனது மகிழ்ச்சியை கொணரும்.

        08.மக்களென் உடைமை, வளங்களென் உடைமை, என  முட்டாள் மனிதன் முழங்குவான். இங்ஙனம்  அவனே அவனுக்குரியவன் அல்லன் எனில் மக்களா உடைமைகள்? வளங்களா உடைமைகள்?

        09.செல்வவள மாற்றத்தால் சிதைவுறா உள்ளமே வாழ்விற்சிறந்த பேறாகும்.  அசைவிலாமல் புயலைத் தாங்கும்  உறுதியான பறைபோல் அசைவிலாமல் உறுதிகொள்வர். அறிஞர் போற்றல் தூற்றலில் அசையார்.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.