Sunday, August 28, 2016

அருட்ஜோதி ஆலாபனை - 1


அருட்ஜோதி ஆலாபனை


நன்று என்பது ஞானா காசா
அன்று சொன்னது நானா தானா
நின்று வந்தது வீணா காதா                       - பண்பாக

தும்து தும்மென ஓயா நாதா
டங்ட டங்கென மாயா நேயா
பும்பு பும்மென ஞாயா வேதா                    - அரண்டோட

சந்த சங்கதி தாதா தாதா
மந்த எங்கதி போபோ போபோ
கந்த சன்னிதி வாவா வாவா                      - எனகூவ

செம்ப டும்மதி ஆடா சாகா
எம்பெ ரும்விதி பாடா வீடா
அன்பெ னும்நதி ஓடா நாடா                     - உலகாக

ஐந்தொ ழில்செய வானோ தானோ
பைந்த மிழ்செய தேனோ பாகோ
நன்ந டஞ்செய வேகா காலோ                  - அறனாக

நன்றி யும்அறி யேனே தானே
ஒன்றை யும்அறி யேனே நானே
ஒன்றி யும்அறி யேனே தீதோ                   - என்பதாக

புண்ணி யஞ்செய நானே பொகா
விண்ண கஞ்செய வானே ஏகா
தன்ன கஞ்செய தானே ஈடா                     - இருந்தேனை

இவ்வு ளம்மற வேனே ஞானா
உன்வ சம்மற வேனே ஜோதீ
நின்அ னல்மற வேனே காணே                - சபைஞான

இங்கி தம்அறி வேனே மாயா
மங்கை யர்அறி வேனே ஆயா
உண்மை யும்அறி வேனே ஏனோ            - மனமாசை

அன்னி யம்அறி யேனே சாகா
கண்ணி யம்அறி யேனே போகா
தண்ணி யும்அறி யேனே ஏனோ               - பிறந்தேனே!
----------------------------------------------------------------------------------
வெள்ளுடை தலைவனை சுற்றிய இறைவனை
கள்ளிடை அமுதென                        - இனிதாக

கற்றன அலையென பற்றிய கரைதொட
உற்றன நிலைபல                            - அரிதாக

பட்டென புலைவிட கெட்டன பலியிட
விட்டன கொலைதனை                   - குணமாக

சத்திய சபையினை நித்திய நிலையினை
அத்தென உடையனை                     - உயிராக

பிச்சைய னெனஎனை   அச்சய அமுதினை
நிச்சய துணையென                         - தருவானை

எப்படி இனிஎனை எப்பகை வருகினு
மப்படி அருளுக                                - எனதாணை

வெள்ளொளி அனலென வள்ளலை அனுபவ
உள்ளொளி தனலென                     - அறிவானை

கற்பக மெனஎனை தற்பத நிலையதை
அற்புத தனமென                             - அருளானை

பித்தனை அழகுற எத்தனை உடலொடு
துத்தனை எனஅதை                         - அறியானை

அப்பர வெளியிடை உட்புக அருளிய
அப்பனை அடிதொழ                       - விழுவேனே!
-----------------------------------------------------------------------------------
அணைத்துக் கொண்டுளங் கணத்துச் சென்றுஎஞ்
சினத்தைக் கொன்றஎன்                            - மனவாச

இளைத்துச் சென்றஎன் தனக்குத் தன்நிழல்
கொடுத்துக் கொண்டநன்                          - மணவாள

தொடுத்துக் கொண்டுஎன் மனத்துக் கண்வடம்
பிடித்துக் கொண்டவன்                              - பிடியானை

எடுத்துச் சொல்லியும் எழுத்துச் சொல்லையும்
விடுத்தப் பண்ணையும்                              - முழுதாக

இழுத்துச் சென்றுஎன் எழுத்தைச் சுட்டிமுன்
இழுக்கைக் கட்டிமின்                                - நிலையாக

மலத்தைப் பொன்குழம் பெனத்தச் சிட்டுஎன்
கழுத்துச் சுட்டிடும்                                     - அறியாமை

விலக்கக் கண்டிடும் அசத்துச் செத்திடும்
துலக்கச் சங்கமம்                                       - உறுவானை

பணத்தைப் பண்ணவும் அணைக்கக் கன்னியும்
எரிக்கத் தன்னையும்                                  - நினையானை

படிக்கக் கல்வியும் நடிக்கத் தன்னையும்
வடிக்கப் பண்ணையும்                              - கொடுத்தானை

நிலைக்கக் கற்றநல் லசுத்தத் தன்மையும்
மலைக்கத் தந்தஎன்                                   - அருட்சுடரே!
---------------------------------------------------------------------------------


                                                தி.ம.இராமலிங்கம் – கடலூர்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.