அருட்ஜோதி ஆலாபனை
இறைவனென ஆன
மறைவுஎன ஆக
அறிவுஎன தேக
- வடிவாக
தருமமென ஈக
சபையுமென தாக
அருவமென தேக - முடிவாக
கருணைவர மாக
தயவுஅரு ளாக
அருவுருவ தேக - நடையாக
அமுதமழை யாக
நனையுமுட லாக
உருவமென தேக - வெளியாக
இருமைபுற மாக
ஒருமைநிலை யாக
இறைமையென தேக - ஒளியாக
பொதுமைநட மாட
கருமைவிட ஓட
ஒலிவடிவ தேக - நாதமாக
இரவுபக லாக
கனவுநினை வாக
நிறைவுஎன தேக - முழுதாக
அவருமில தாக
இவருமில தாக
இருமைஒரு தேக - கனமாக
மரணமில தாக
உடலுமென தாக
சரணமென தேக - நெடுவாழ
எவருமடை யாத
நிலைஎன தாக
பகருமொரு தேக - அருளானே!
----திருச்சபை - 1883
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.