Sunday, August 28, 2016

அருட்ஜோதி ஆலாபனை - 5


அருட்ஜோதி ஆலாபனை

அன்னமளித் தானைநினைத்                     - துயராற
இன்பமளித் தானைஅணைத்                    - தகமாக

கண்களளித் தானைமுகத்                          - தொளியாக
கண்டுகளித் தேனைஎனக்                         - களிப்பாக

தங்கஅகத் தானைமனக்                            - கரும்பானை
எங்களருட் பாவைஅளித்                          - திருந்தானை

வென்றஅருட் ஜோதிஎனத்                       - தழியாத
நின்றஅருள் தேகமுறத்                              - துணையாக

வந்துஎனக் காணைஅளித்                        - திணையாக
என்றுமிருப் பாணைஇடத்                        - திருப்பேனே! 
----------------------------------------------------------------------------------------
இறைவனென ஆன மறைவுஎன ஆக
அறிவுஎன தேக                                         - வடிவாக

தருமமென ஈக சபையுமென தாக
அருவமென தேக                                       - முடிவாக

கருணைவர மாக தயவுஅரு ளாக
அருவுருவ தேக                                          - நடையாக

அமுதமழை யாக நனையுமுட லாக
உருவமென தேக                                       - வெளியாக

இருமைபுற மாக ஒருமைநிலை யாக
இறைமையென தேக                                - ஒளியாக

பொதுமைநட மாட கருமைவிட ஓட
ஒலிவடிவ தேக                                          - நாதமாக

இரவுபக லாக கனவுநினை வாக
நிறைவுஎன தேக                                       - முழுதாக

அவருமில தாக இவருமில தாக
இருமைஒரு தேக                                       - கனமாக

மரணமில தாக உடலுமென தாக
சரணமென தேக                                        - நெடுவாழ

எவருமடை யாத நிலைஎன தாக
பகருமொரு தேக                                       - அருளானே!
--------------------------------------------------------------------------------
பித்தனென வெற்றுசட லத்தைஅடை வித்துவிதி
வித்தைதனை இச்சையென                       - உலகாட

சிக்கியழ விட்டுஎனை மிக்ககவ னித்துஒரு
மித்தஅடி இட்டஉனை                              - மனதாரப்

பெற்றதனை எட்டுதிசை உத்தமனை நித்தமுற
உற்றதனை விக்கியழு                               - துனைப்பாட

செத்தவரை எட்டிஎழ வித்தஉனை அத்துஎன
இட்டுஅக நெக்குருகி                                - விழிமூட

உத்தரச பைக்கெனஎ னைத்தழுவி புத்ரனென
உத்தரவ ளித்தஒரு                                     - தயவான

புத்தகம தைத்துழவி சித்தனைநி னைக்கதின
நித்திரைய துத்துலைய                              - விழிப்பாக

எத்தவம தைச்செயநி னைக்கினுபு லைக்கொலைசெ
யத்தவமி லாக்கயமை                                - உருவாக

அக்கடைவி ரித்தனைஅ ருள்உடமை விற்றவனை
முத்தெனஎ டுத்தணிய                                -  அழகாக

எத்தகந டத்துலக மக்களும டத்தணைய
அத்தகந டப்பவரை                                   - அறிவாக

இத்தகந டக்கமல மிட்டிடுமி டத்தணைய
இச்சகயு கக்கடலை                                   - விடுவோமே!
------------------------------------------------------------------------------------
                                   தி.ம.இராமலிங்கம் – கடலூர்
 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.