Saturday, August 6, 2016

சுதந்திரம் வாழி



01-08-2016 அன்று "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியானது;

சுதந்திரம் வாழி

சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கும் வள்ளற்பெருமானுக்கும் எமது சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வள்ளற்பெருமான் இவ்வுலகிடையே வருவிக்கவுற்றதன் பிறகே இம்மண்ணுலகில் விஞ்ஞான அறிவு மனிதர்களிடையே பெருக்கெடுத்தது. அதன் விளைவாக நாம் இன்று பல எண்ணற்ற அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்து நவநாகரிக உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக ஓலைகளில் காகிதங்களில் எழுதும் எழுத்துக்களை எல்லாம் நாம் தற்போது மின் எழுத்தின் வடிவில் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டுமிருக்கிறோம்.

அருளியல் லீலைகள் செய்யும் சுதந்திரத்தைப் பெறவே வள்ளற்பெருமான் இவ்வுலகிடை வருவிக்கவுற்றார். அதன்படி இறைவனிடன் தற்சுதந்திரத்துடன் ஐந்தொழிலையும் செய்யும் ஆற்றலை பெற்றார். ஆனால் அவர் வாழ்கின்ற உலகமோ சுதந்திரம் இன்றி இருந்தது. ஒரு மனிதக்கூட்டம் மற்றொரு மனிதக்கூட்டத்தை அடக்கி ஆண்டுக்கொண்டிருந்தது. இப்படி அடக்கி ஒடுக்கப்பட்ட இருபத்து ஐந்து கோடி மக்களுள் வள்ளற்பெருமானும் ஒருவராக அன்று இருந்தார்.

அருளியல் சுதந்திரம் பெற இவ்வுலகிடையே வந்தவர்க்கு அரசியல் சுதந்திரம் இல்லையே! என்பதை உணர்ந்த இறைவன், இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டார். அதுவும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதனை முதன்முதலில் வித்திட்டார். ஆம்! 1857-ஆம் ஆண்டு வேலூரில் சிப்பாய் கலகம் தோன்றியது. இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம். அப்போது வள்ளற்பெருமானுக்கு வயது 34 நடைபெற்றுக்கொண்டிருந்தது. சென்னையில் வசித்துக்கொண்டிருந்தார். இந்த சிப்பாய் கலகம் வள்ளற்பெருமானை யாதொரு நிலையிலும் பாதித்துவிடவில்லை. ஆம்! 1857-ஆம் ஆண்டு வள்ளற்பெருமான் 'சின்மய தீபிகை' என்னும் அருளியல் நூலை பதிப்பித்துக்கொண்டிருந்தார்.

அருளியல் சுதந்திரத்தை பெற்ற வள்ளற்பெருமான் அதைப்போலவே அரசியல் சுதந்திரத்தையும் அகிம்சை வழியில் பெறவிரும்பி அதனை காந்தியடிகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். அதன் விளைவாக நாம் தற்போது 70-ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். 

http://www.vallalarspace.com/user/c/V000021579B
       or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWWE9ab2VZQm5GRjA/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.