அருட்ஜோதி ஆலாபனை
கனக வடிவஅ கத்தினை
பெற்றனை
பிரண வவடிவ
ஒற்றனை கற்றனை
பெரும திவடிவ
வள்ளலை உற்றனை - கதியாக
புருவ நடுநட
வித்துஎ னக்குனை
துருவ மடுகட
வித்துகொ டுத்தனை
பருவ வடுபட
வைத்தசு கத்தனை - பதியாக
அசைவ உணவினை
விட்டிட அக்கொலை
பலியி டுகொடுமை
விட்டிட அச்சபை
ஒருமை இறைவனை
எட்டிட முச்சுட - ரொளியாக
தினம வனடியை
நட்டிட சித்தக
அருளை உலகிடை
இட்டிட முத்தக
உடலை தயவிடை
உற்றிட அத்தக - வழியாக
சமய மதஇன வெட்டிய
வள்ளலை
தரும சபைஎன
ஒட்டிய உள்ளனை
கரும வினைதனை
நெட்டிய நற்றனை - உறவாக
அமைய பிறவிஎ டுத்ததை விற்றதை
கடைதி றவினைஎ
டுத்ததை அப்பனை
எனது றவினனை
பெற்றதை எப்படி - இனமாக
இதய நடனனை ரத்தஇ
ருப்பனை
உதய எழுவனை
ஒத்தவ னப்பனை
நினைய அழுவனை
நித்தமு மற்றதை - அணையாது
ஒழுகி மனமட
துட்டனை விட்டனை
உருகி மனதிட
வித்தனை உத்தம
நிலைய னைஅருகி
அத்தக வித்தக - இடமாக
அணுவி ணுமணுவை
வித்தொளி எத்தனை
பணுவி ணுபணுவை
ஒத்தொளி அத்தனை
கணுவி ணுகணுவை
சித்தொளி ஒத்தனை - சிரமாக
எனது சுயநல
புத்தியை நச்சென
தனது அகநல வித்தையை
அச்சென
நமது பொதுநல சித்தியை உச்சென - தொடுவேனே!
---------------------------------------------------------------------------------------
உயிரென இணைந்து
மயிரென உழன்று மெல்ல
சடமென உரிந்து
இன்னு - மடிகாண
உலகினை அடைந்து
மகிழென மயங்கி நில்ல
மனமிலை கலந்து
உன்னை - படியேற
கடகட கடந்து
வந்து அகநக மணந்து நின்று
கலகல கலந்த
சிந்தை - மணவாள
கலைநிறை தமிழ்மொ
ழிந்து இறைநிலை நுழைந்து விண்டு
வலைகலை அகன்று
நின்ற - அறவானை
சபையென நடந்து
சங்க அபையனை நினைந்து பந்த
பதிபசு இணைந்து
வந்த - உருவானை
கடைதனை திறந்து
அந்த அருளனை அடைந்து இந்த
மடைதனை அகன்று
வந்த - அருளானை
மதிதனை வணங்க
விந்தை அடிமுடி அளந்த எம்மை
அதிபதி இணங்க
ஐந்தை - உழயேவ
சமரச மருந்தை
சங்க நடைமுறை மருந்தை அண்ட
அதிசுக மருந்தை
நன்று -
உளமேவ
சபையெனு மருந்தை
சுடரெனு மருந்தை பிண்ட
மதியக மருந்தை
நின்று - அடியாழ
இடையழ கிகொங்கை
பொங்க முகஅழ கிமங்கை கொஞ்ச
நடையழ கனென்கை துஞ்ச - கலந்தேனே!
---------------------------------------------------------------------------------
அருளகச் சுடரொளி
சரணஞ் சரணம்
நடுவகத் தகவொளி
சரணஞ் சரணம்
திருநடப் பரவொளி
சரணஞ் சரணம்
சுயமெனத் தருமொளி
சரணஞ் சரணம்
நடமெனத் திருவொளி
சரணஞ் சரணம்
அறிவெனத் தகுமொளி
சரணஞ் சரணம்
முகநடுத் திகழொளி
சரணஞ் சரணம்
வெளியிடைக்
கடவொளி சரணஞ் சரணம்
உயிரிடைக் கருவொளி
சரணஞ் சரணம்
அருளெனும் பெருவொளி
சரணஞ் சரணம்
--------------------------------------------------------------------------------------
தி.ம.இராமலிங்கம்
– கடலூர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.