அருட்ஜோதி ஆலாபனை
சிதம்ப ரந்தனை
பெயரொடு
பரம்ப ரந்தனை
உடலொடு
நடம்ப லந்தனை
உயிரொடு - இணையானை
கனத்த சிந்தனை
பொடிபட
சினக்க புன்புலை
களைவிட
நினைத்த விண்ணனை
பிடிபட - உளவாக
இரக்க சங்கம
அடலிடை
பிறக்க கங்குலு
பகலிடை
சிறக்க எங்கிலு
மொருபடை - இனிதேக
எனக்கு உன்துணை
அறமுற
வகுத்த விண்ணினை
திறமுற
சுகித்து விண்டனை
நிறமற - அருவாக
வடக்கு லிங்கனை
அடிதொழ
கிழக்கு திங்களை
அகமெழ
வழக்கு எங்களை
விடஎழ - ஒளியாக
வெளுப்பு மஞ்சளை
கொடிஎன
அமைத்து மஞ்சணை
உயிரென
சமைத்த விஞ்ஞனை
நடுவென - அகமேவ
விருப்பு நெஞ்சினை
விடமென
வெறுப்பு நஞ்சினை
மடமென
அறுத்து பஞ்சென
பறபற - வெளியாக
கலப்பு எண்திரை
விலகுற
உவப்பு எண்திசை
நிறையுற
நடப்பு கண்தசை
பிளவுற - இறையாக
அருட்பெ ரும்ஒளி
எனைவுற
தனிப்பெ ருங்கரு
ணைமகிழ
இனித்த நெஞ்சக
மதியுற - உனைப்பாட
அசுத்த ஐங்கர
ணமுநினை
நினைக்க தங்கமு
னைகளென
முளைக்க அங்கமு
மொளியென - ஒளிதானே!
--------------------------------------------------------------------------------------
கனவு தானென
வந்தன சென்றன
நனவு போலென
நன்னிலை என்றன
தரும னாகிய
உன்னிலை ஒன்றது - உருவான
உடலை வானென
எய்திய விந்தனை
நடன நாதனை நன்னிய
எந்தனை
கடவு பாதனை
என்னிலை வந்தனை - பொதுவான
உலக போதனை தந்தனை
இங்கெனை
கலக சோதனை விண்டனை
மண்மத
சமய ஈனனை வெந்தனை
வென்றனை - புகழான
கருணை ஜோதியை
எந்தவ உந்தியை
உலக நீதியை
கண்ணென உண்மையை
அறிய ஆதியை
அந்தியை வெல்லுக - உனதாணை
புரிய வோஎனை
இந்நிலை எய்தியதை
இனிய ஊனென விண்கலை
எல்லையதை
நுகர வோஎது
வுந்தனை அல்லனை - அடிமேவ
மகிமை நானென
என்றனை தன்னிலை
அருக ஊனென நின்றனை
விந்தினை
இணைய நாதமு
மன்றனை என்தவ - அலையானை
அருமை நாயக
அன்பனை சந்தன
நறும தேகனை
அம்பல வண்ணனை
மதுர வேதனை
என்சுக மன்னனை - முகமேவ
தரும வீதிந
டந்தும லர்ததை
அறிவு நாடுஅ
டைந்துவ லங்கலை
அழிவு தேகம
றந்திட பிங்கலை - உடையானை
அழகு ஞானம டைந்துவ
ளர்கிற
பழகு ஜீவஇ ரங்கலை
முந்தைய
நிலைய ஆதிவ
ரங்களை ஒன்றின - எனதான
பழைய ஆணவ அன்பினை
நிந்தனை
விழைய பூமண
இன்பனை அங்கனை
இழைய தீகுண
நண்பனை எந்தனை - மறவேனே!
------------------------------------------------------------------------------------------
வந்தனம் சொன்னவனை சந்தனம் சொந்தமதை
பந்தனம் பன்னுவதை - நினையாத
வஞ்சனம் மிஞ்சியனை கஞ்சனங் கன்மமனை
மஞ்சனம் துஞ்சுவதை - குணமாக
எஞ்ஞனம் கொஞ்சிஅதை பஞ்சணம் கொண்டஎனை
அஞ்சுகம் தஞ்சமதை - நடையாக
மங்கலம் மங்கைஅழ எங்குலம் என்றணைய
சங்கமம் அங்கமதை - இனிதாக
விண்ணகம் சென்றவரை மண்ணகம் விண்டுவர
எண்ணகம் கொண்டவனை - பரமாக
வெண்துகில் கொண்டவரை ஐந்தொழில் கண்டவரை
கண்கவர் கண்ணவனை - உயிராக
வெஞ்சுடர் விஞ்சுவரை நெஞ்சகம் சென்றவரை
நஞ்சிடர் வென்றவனை - துணையாக
முந்திசொல் அந்தமதை மந்திரம் என்றவரை
சந்திமுன் கண்டவனை - அறமாக
என்னவன் சொல்லியதை இன்னருட் சொல்லதனை
அன்பருள் சங்கமனை - அருளாக
என்னுயிர் அன்பதனை உன்னுயிர் கண்பதிய
என்தவம் செய்ததனை - அறியேனே!
-------------------------------------------------------------------------------------------
தி.ம.இராமலிங்கம் –
கடலூர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.