அருட்ஜோதி ஆலாபனை
ஆனென பெண்ணென இன்பமும் தந்தன
தாயென தந்தையென பந்தமும் வந்தன
தீயென அப்புவென ஐம்பதம் நின்றன - வடிவாக
தீயன நன்றென நின்பதம் என்றது
ஈவது அன்பென நின்குரல் சொன்னது
போவது துன்பென உன்அறம் வந்தது - முடிவாக
வானென அன்பனை முச்சுடர் தந்தது
நானென தன்வினை அச்சுடர் வென்றது
பாவென பண்களை இச்சுடர் கண்டது - தயவாக
பூவென பொன்னென இவ்வுடல் நின்றதை
தீயிலு மண்ணிலு மங்கிமண் தின்றதை
மூவென நுண்ணுய அங்கதன் என்றதை - நிலையாக
ஜீவிய அன்பினை எவ்வுயிர் தன்னினு
தூவிய அன்பனை அவ்வுயிர் தன்அனு
பூதியை அன்பென இவ்வுயிர் வென்றிடு - மலையாக
ஆவியு அங்கமு மிவ்வுயிர் தன்னையு
கூடுற கொண்டனை எம்முயிர் தன்மையை
ஆடுற விண்டனை செந்தமிழ் வண்ணனை - துணையாக
நாயென நின்றனை நல்லவன் என்னெனு
நாடக மன்றனை வல்லவன் என்னெனு
ஊடக மன்னனை என்னவன் என்றெனை - அபயமாக
பூரண அங்கனை நன்சுடர் பங்கனை
ஆரண சங்கனை மண்மலர் தங்கனை
காரண ரங்கனை விண்ஒளிர் பந்தனை - கனலாக
ஓரின எல்லையை ஒன்றெனும் தன்மையை
ஈரின மென்றுல கங்களும் பண்மையை
தூறின உண்மையை கண்டெனும் அந்தனை - தடையாக
காணென வல்சம யங்களும் வந்தன
வீணென வன்விட யங்களும் செய்தன
நானென பண்மத வன்மமும் செத்தன - இனிதாக
--------------------------------------------------------------------------------------------------
வெண்மைத் துறவுத் தந்தைக் கருணைக்
கண்ணைத் திறமுறத் - தருவானே
எண்ணித் துணிகக் கன்மத் தவனைக்
கண்ணில் ஒளிரக் - கதிரோனே
என்னுள் கதவைத் தங்கத் துகளைத்
தட்டித் திருடக் - கருதுவானே
கண்ணுள் கனவைக் கொண்டுத் தவணைத்
தொட்டில் பொருளைச் - சுகமாகவே
சிந்தத் ததனைச் சந்தத் தணையத்
திக்கித் தினறக் - கலைத்தேனே
விந்துத் துயிரைச் சிந்திக் களியக்
முந்தும் எமனைக் - கடுத்தேனே
மந்தித் தனையக் கொஞ்சிக் குலையக்
அந்திப் பொழுதைக் - கழித்தேனே
விண்ணுக் கொருதக் கன்அக் கலையைக்
பண்ணக் குருவைக் - கைகொண்டேனே
வஞ்சக் கொலைகள் விஞ்சச் செயலைக்
அஞ்சக் கருணைக் - கலைவாழவே
குண்டக் கொடிகள் அண்டப் பயலைக்
கண்டக் குருதிக் - குரவானே!
-----------------------------------------------------------------------------------------------------
கணக்கறிந் தென்னைச் சித்தனெ னத்தந்
தனைப்பரிந் துண்ணும் சத்தமு தைத்தந்
தெனைப்புகழ் கண்ணில் சத்திய சத்சங் - கங்களாக
கணத்திலென் பந்தத் தைக்கெட வைத்தும்
கலப்பிலென் அந்தத் தில்பல முத்தம்
தரும்விதம் எண்ணில் வெக்கிமு
கத்தைப் - புதைத்தேக
மதத்தைவன் சந்தைப் பித்தென நித்தம்
உழைத்துசங் கம்கற் றுத்தர சித்தம்
விதைத்துஎங் கும்அத் துப்பட புத்தம் - புதியேனை
மதித்துவந் தென்னைப் பற்றிய அட்டம்
விதித்தஐந் தென்னும் புற்றிலு
றும்செங்
கருட்சுடர் பொன்னும் சுட்டிய
வள்ளல் - பதியானை
அழைத்துஎன் நெஞ்சில் சத்தென விட்டம்
படைத்துஎன் இல்லத் தில்உன் பட்டம்
பறக்கஎன் கல்விக் கற்றனை அச்சம் - விடுத்தேனே
அருட்பெருஞ் சங்கத் தில்எனை வைத்துத்
தனிப்பெரும் அங்கத் தில்புணை
யட்டும்
பொருள்தரும் தங்கத் தில்இணை யட்டும் - நீடுவாழ
அணுக்கமென் னும்சித் தத்தொளி
பட்டும்
மணக்கஎங் கும்நித் தத்திரை விண்டும்
குணத்திலென் றும்வள் ளல்வழி சென்றும் - இரக்கமாக
உயிர்அடைந் தும்நட் டப்பட விட்டும்
மயில்குயில் அந்தத் தத்துவ எட்டும்
இறக்கஎண் ணும்பித் தத்தினை கட்டும் - நலமாக
பதுக்கிசெல் வம்முட் டுப்பட வட்டிக்
கனக்கணக் கும்தட் டுப்பட எட்டிக்
கனிப்பழுத் தென்னக் கஞ்சனை சுட்டென் - னஆவது
புதுப்பகல் வந்துக் குத்திட பத்திப்
படுக்கையில் நின்றுக் கத்திட
முத்திக்
கொடுக்கையில்
விண்ணைக் கட்டிட சத்திப் - பெற்றேனே!
---------------------------------------------------------------------------------------------
தி.ம.இராமலிங்கம்
– கடலூர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.