Sunday, August 28, 2016

அருட்ஜோதி ஆலாபனை - 7


அருட்ஜோதி ஆலாபனை

உலகிடை வளரொளி சரணஞ் சரணம்
உளமிகு அகவொளி சரணஞ் சரணம்

நடுஇட முகவொளி சரணஞ் சரணம்
தயவுற அருளொளி சரணஞ் சரணம்

அமுதெனு மொருவொளி சரணஞ் சரணம்
மயமெனு மனமொளி சரணஞ் சரணம்

புறமுறு உடலொளி சரணஞ் சரணம்
சுகமுறு வடலொளி சரணஞ் சரணம்

பொருளக தனஒளி சரணஞ் சரணம்
சபைசபை சபைசபை சரணஞ் சரணம்
--------------------------------------------------------------------------------------------
மனத்திருந் தானை இனிப்புறுந் தேனை
பிடித்தருந் துதவ உருக்குலைந் தேனை              - உறவாட

பசித்திருந் தானை வனப்புறுந் தாளை
அடித்தொழுங் கனவை நினைத்திருந் தேனை - வலமாக

தனித்திருந் தானை அடிக்கரும் பானை
ருசித்திடும் மனதை அடுத்திருந் தேனை             - உயிராக

விழித்திருந் தானை நடித்திருந் தானை
கிளைத்திடுங் கனலை உடுத்திருந் தேனை        - திறமாக

படைத்திருந் தானை கொடித்தரும் பூவை
பறித் திடும் அமுதை எடுத் திருந் தேனை            - ஒளியாக

இனிப்பிறந் தாட திடுக்கிடும் சாவை
விடுத்திடுந் திறனை அளித்திடுஞ் ஞான             - உருவானை

துடிப்புடன் பாட மதத்துவம் சாக
உகப்புயல் அதனை சமத்துவம் காண                - எழுவானை

ஒளிப்புகுந் தாட மயில்குயில் ஆக
உருப்புணைந் ததனை அருள்கவிப் பாட           - வருவானை

பவக்கடல் ஆதி திருச்சபைப் பாடி
கடக்கவந் தனைய இதுத்தகும் நீதி                     - எனதாணை

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி     - நமதாக   
------------------------------------------------------------------------------------
அன்பெனும் வெள்ளப்                     - புனலாட
வெஞ்சுடர் உள்ளக்                          - தனலாட

எண்ணினும் அள்ளக்                       - குறையாத
கண்ணினுள் கள்ளக்                        - கதிராட

சங்ககம் பட்டுச்                                - சபைப்பாட
எங்கிலும் எட்டுத்                             - திசையாட

தந்நலம் விட்டுப்                               - பொதுவாக
விந்நலம் எட்டப்                              - பெருவாழ

விண்ணகம் ஒத்தச்                           - சுடரானை
என்னகம் சிக்கப்                              - பிடித்தேனே!
------------------------------------------------------------------------------------


                                             தி.ம.இராமலிங்கம் – கடலூர்
 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.