அருட்ஜோதி ஆலாபனை
இரவிலந்த சத்சித்த விந்தை
உருகலந்து தித்தித்த எந்தை
அருநினைந்து விக்கித்த சிந்தை - எனதாக
தவமுதல்வ சித்தத்து நின்று
சபைஉழன்று சுத்தத்து விண்டு
ஒருஇரண்டு அத்தத்து ஒன்றி - மயமாக
மருவுமங்கை முத்தத்து முங்க
பெருகுகொங்கை திக்கத்து நின்ற
இளகுநெஞ்சை பித்தத்து துஞ்சு - மடமாயை
அருளுகின்ற பக்கத்து வந்து
இருளுகின்ற பற்றற்று நின்று
இனியஅன்பை சிக்கற்று வென்று - முடிசூட
சமயமன்ற பத்தற்று எஞ்சி
மதசடங்கு அக்கக்கு நஞ்சி
இலகுதர்ம மக்கட்கு தங்கி - அருளாக
அறஒழுங்கு மட்டற்று விஞ்சி
நரகமின்றி கட்டுற்று அஞ்சி
மரணமின்றி கட்டற்று பொங்கி - பெருவாழ
மனமழுந்த இச்சித்து இங்கு
தினவிருந்து பிச்சித்து தெங்கு
தனமருந்து உச்சத்து தங்கு - அணியாக
அருளவல்ல புத்தத்தை நம்பி
விலகவல்ல பச்சயத்தை அண்டி
உழலவல்ல யுத்தத்தை மண்டி - இடயேக
அரியபொன்னு பொற்சுத்த வண்ண
பிரணவன்ன சொற்சுத்த எண்ண
துரியவண்ண சத்சுத்த உண்ண - த்ரிதேக
உலகசங்க முற்றத்தை எய்தி
சமரசசங்க வித்தத்தை தந்து
அமரஅங்க சத்தியத்தை என்று - மறவேனே!
------------------------------------------------------------------------------------
சுத்தத்திரு சித்தத் தவநிலை
சத்துக்கொரு ஒத்தத் தலைவன
புத்துத்தொளி சுத்தித் தருகிற - சுயஜோதி
பற்றுக்கொரு முற்றுத் தடைபட
சுற்றுச்சதி அற்றுக் குலைபட
கற்றக்கலை நிற்கத் தலைபட - மணமாகப்
பட்டுத்தெரி வித்தக் கலையினை
கட்டுக்களி நட்டத் தலைவனை
எட்டுத்திசை வட்டப் புலவனை - மறவேனே
துக்கத்துளைச் சிக்கிச் சிறைபட
பக்கத்துணை நிக்கக் கதிரொளி
முக்தித்தனை முக்கிப் பரவெளி - நடமாடப்
பச்சைத்திரை அச்சுத் திருடனை
பிச்சுப்பட எச்சத் துருவனை
நச்சுப்பகை இச்சைத் திரையனை - புறமேவத்
தப்புத்துடை துப்புக் கடவுளை
அப்புத்துவக் கப்பக் கடலிடை
உப்புத்தகு ஒப்பக் கரைபடக் - கடவேனே
கள்ளச்சபை பள்ளிக் கொளஎனைத்
தள்ளித்திரு அள்ளிக் கொளவினை
எள்ளிப்பகை துள்ளித் துயருரக் - குருவானைக்
கட்டிப்பிடி தட்டுத் திரைமறை
விட்டுப்படி மொட்டுத் தலையனை
தட்டிக்கொடு விட்டத் தொளிதனை - நிறைவாக
வித்தைப்பல தத்தித் திகழொளி
அத்தைத்தர முத்தித் தயவென
நித்தத்தற புத்தத் தழகனை - உறவாகச்
சிந்தைச்செய மந்தைத் தளைவிட
சிந்துக்கவி பந்தல் பரவிட
பந்தப்பெரு
இன்பம் தருகிட - வருவாரே!
-----------------------------------------------------------------------------------------
தருமம்மிகு
லிங்கனை நெஞ்சனை
புருவம்நடு
சிந்தனை கண்டனை
உருகும்மன அந்தனை
வெண்ணுடை - கணவானை
அமுதம்தரு குண்டலி
வண்டனை
கனகம்தகு கண்மணி
கண்டனை
அகரம்எழ நெஞ்சொலி
தந்தனை - அகமாக
கலியும்விட
நன்னடை நல்கிட
பலியும்விட
அன்புடை நின்றிட
வலியும்விட
வன்திரை அன்றிட - நிலையாக
வனமந்தியை தன்நிலை
சொல்லினு
இனசிந்தையை
முன்நிலை பண்ணுகை
அதைஒன்றிய என்நிலை
அய்யனை - பிடித்தேக
சபைதந்தனை புன்பசி
அன்னனை
கதைவிண்டனை
வன்மத தண்டனை
தருவிந்தனை
மன்மத கண்ணனை - மனதூற
விருதம்என வன்புலை
உண்பதை
பலரும்விட பின்அதை
உண்பதை
தினமும்கொள
அன்பினை கொன்றனை - மனமாற
தயவும்அற கல்வியு
மொன்றிய
தவமும்நடு கண்ஒளி
அண்டிய
உடலும்நட நல்சபை
யும்பெற - பெருமானை
நினையும்மன
எண்ணமு முந்திய
வினையும்அற
திண்ணமு மிஞ்சிய
இணையும்திற
சங்கமு மெய்துற - அருளானை
சபையன்சத சங்கம
வெண்ணொளி
அபையன்மத சங்கதி
பொய்யென
உடையன்நித மும்அவ
னின்முக - நினையானை
அடியன்இறை வன்என
எங்குமு
டையவன்அக இன்பமு
றும்மது
அமுதன்நிஜ அன்பன
வன்அடி - பணிவேனே
---------------------------------------------------------------------------------------
தி.ம.இராமலிங்கம் – கடலூர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.